திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதியில் 42 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு
8 Apr 2026, 5:30 am

திருச்சி கிழக்கு, மேற்கு தொகுதியில் 42 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

திருச்சி, ஏப். 7- திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் மொத்தம் 276 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட 20 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட 22 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

ஸ்ரீரங்கம் மற்றும் திருவெறும்பூர் தொகுதிகளிலும் முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சில சுயேச்சை மற்றும் மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.