தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நொய்டாவும் - சிங்கிதாராவும்

5 May 2026, 9:09 pm
நொய்டாவும் - சிங்கிதாராவும்

நொய்டாவும் - சிங்கிதாராவும்

இரண்டு போராட்டங்கள் அண்மைக் காலங்களில் நாடு முழுவதுமான கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளன.

ஒன்று, ஏப்ரல் 10 அன்று நொய்டாவில் 300 தொழிற்சாலைகளில் இருந்து வீதிகளுக்கு வந்து மாதாந்திர குறைந்தபட்ச ஊதியம் ரூ.

20000 ஆக்கப்பட வேண்டும் என்று நடத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆயத்த ஆடை தொழிலாளர்களின் போராட்டம்.

இரண்டாவது, சத்தீஸ்கரில் உள்ள வேதாந்தாவின் சிங்கிதாரா அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட உயர் அழுத்த நீராவிக் குழாய் வெடித்ததால் 20 தொழிலாளர் உயிரிழப்பு, 15 பேர் காயத்திற்கு எதிரான போராட்டம்.

முதலாவது உழைப்பின் விலைக்கான போராட்டம் எனில் இரண்டாவது உயிரின் விலைக்கான போராட்டம்.

அடக்குமுறையும் அரை மனதும் ஏப்ரல் 13 அன்று நொய்டாவில் 1200 காவல் துறையினர் களம் இறக்கப்பட்டனர்.

அவர்களில் ஆயுதப்படை, விரைவு நடவடிக்கை பிரிவு எல்லாம் உண்டு.

தடியடி அரங்கேறியது. 400 பேர் சிறை. ஆனாலும் தொழிலாளர் போராட்டத்தின் அழுத்தத்தால் உ.பி யோகி ஆதித்யநாத் அரசாங்கம் குறைந்த பட்ச ஊதியத்தை 21% அதிகரிப்பதாக கூறி ரூ.13690 (Unskilled), ரூ.16868 (Skilled) என அறிவித்தது.

தொழிலாளர்களின் ரூ.20000 என்ற கோரிக்கை எட்டப்படவில்லை. 16,868க்கும் 20000க்கும் இடையிலான வித்தியாசம் வெறும் பேரம் சம்பந்தப்பட்டது அல்ல.

இது அந்த குடும்பம் தலை நகர பகுதியில் செலுத்துகிற வாடகை, கேஸ், பள்ளிக் கட்டணம் ஆகியவற்றிற்கும், அரசாங்கம் வழங்க விரும்பிய “கௌரவமான குறைந்தபட்ச ஊதியத்திற்குமான” வித்தியாசம். உயிரா லாபமா? சிங்கிதாரா கதையின் அடுத்த தொடர் 4 நாட்களில் வெளி வந்தது.

அந்த விபத்து காரணம் “தொடர்ந்த கவனக் குறைவு மற்றும் இயந்திர நிர்வகிப்பில் இருந்த பலவீனம்” என்று.

இந்த விபத்தில் இறந்தவர்கள் வேதாந்தாவின் சொந்த ஊழியர்கள் அல்ல, அவர்களின் சப் கான்ட்ராக்டர் மூலம் நியமனமானவர்கள் என்பது இன்னொரு எக்ஸ்போஸ். இது அங்கே நிலவும் பணியமர்த்தல் முறைமையின் பிரதிபலிப்பு. சத்தீஸ்கரில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 296 தொழிலக விபத்துக்கள் நடைபெற்றுள்ளன.

தெலுங்கானாவில் ஜூலை 2025இல் சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் வெடிப்பு விபத்தில் 44 பேர் பலியானார்கள்.

பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்கள். அங்கே தீ எச்சரிக்கை மற்றும் முன் தடுப்பு ஏற்பாடுகள் பலவீனமாக இருந்ததாக மாநில தீயணைப்புத்துறை தெரிவித்தது.

இந்தியா முழுமையும் தொழிலக ஆலோசனை சேவை பொது இயக்குநரகம் தெரிவிக்கிற தகவல்களின்படி 2018இல் இருந்து 2020 வரை 3331 தொழிலக விபத்துக்கள் நடந்தேறி உள்ளன. அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 3 விபத்துக்கள்.

இவ்வளவு விபத்துக்கள் நடந்தேறி இருந்தாலும் இதற்காக தொழிலக சட்டத்தின் படி இதே காலத்தில் கைதானவர்கள் 14 பேர் மட்டுமே.

இவையெல்லாம் சம்பந்தமில்லாத தனித்தனி நிகழ்வுகள் அல்ல.

பொருளாதாரம் எத்தகைய சூழலில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் வெளிப்பாடே. இந்நிலையில் வெளியான நான்கு தொகுப்பு சட்டங்கள், தொழிலாளர் பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்துவதற்கு மாறாக மேலும் தளர்வுகளை தந்துள்ளன.

மழுங்கிப் போன சட்டங்கள் தொழில் உறவு தொகுப்பு சட்டம் 2020இல் லே ஆஃப், பணி நீக்கம், ஆலை மூடல் ஆகியவற்றை மேற்கொள்ள அரசின் முன் அனுமதி பெறுவதற்கான தொழிலாளர் எண்ணிக்கை வரம்பு 100 லிருந்து 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது 1982இல் இருந்த வரம்புக்கு சக்கரம் பின்னோக்கி சுழற்றப்பட்டுள்ளது. மாஸ் லே ஆஃப் அலையாக அடித்த காலத்தில், 5 லட்சம் தொழிலாளர்கள் வீதிகளில் தூக்கி எறியப்பட்ட நேரத்தில் 34 ஆண்டுகளுக்கு முன்பாக கொண்டுவரப்பட்ட பாதுகாப்பு அம்சம் பறிக்கப்பட்டு விட்டது.

பணித்தல பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்புச் சட்டமும் “தொழிற்சாலை” என்பதை தீர்மானிப்பதற்கான வரையறைகளை (மின் உபயோகமெனில் 10 லிருந்து 20 என்றும், மின் உபயோகம் இல்லையெனில் 20 லிருந்து 40 என்றும்) உயர்த்திவிட்டது.

இத்தகைய தளர்வுகள் எல்லாம் பெரும்பான்மை தொழிலாளர்களை பாதுகாப்பற்றவர்களாக மாற்றியிருக்கிறது. மு

ன் தகவல் இல்லாத கண்காணிப்பு முறைமை கைவிடப்பட்டுள்ளது.

தற்போது சுய சான்றிதழ் மற்றும் மாதிரி அடிப்படையிலான சோதனை என்பது நடைமுறைக்கு வந்துள்ளது.

இது சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் தீர்மானம் எண் 81க்கு (முன் தகவல் இல்லாத சுயேச்சையான கண்காணிப்பு) விரோதமானது.

தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்வதானால் 60 நாட்கள் முன்னறிவிப்பு தரவேண்டும்.

திடீர் வேலை நிறுத்தங்கள் செய்ய இயலாது. தீர்ப்பாய அமர்வுகள் நடைபெறும் போது அல்லது அதற்கு பிறகு சில வாரங்கள் வரை வேலை நிறுத்தங்கள் செய்ய முடியாது. தற்செயல் விடுப்பு 50 சதவீதத்திற்கு அதிகம் எனில் அது வேலை நிறுத்தமாக கருதப்படும்.

அனேகமாக வேலை நிறுத்தங்களையே சாத்தியமற்றதாக இந்த தொகுப்பு சட்டங்கள் ஆக்கியுள்ளன.

எது அளவுகோல்? சட்டங்களில் மாற்றங்கள் தேவைப்படலாம். ஆனால் எத்தகைய மாற்றங்கள் என்பதே பிரச்சனை.

சட்டங்களின் தொகுப்பு, சட்டங்களின் நீர்ப்பு ஆக இருக்க முடியாது. எளிமைப்படுத்துவது என்பது தொழிலாளர்கள் இழப்பதாக இருக்க முடியாது. நொய்டாவும், சிங்கிதாராவும் தந்துள்ள மே தினச் செய்தி இதுதான்.

எந்த ஒரு தொழிலாளர் சீர்திருத்தங்களும் பயன் தரக்கூடியவை என்பதற்கு இரண்டு அளவுகோல்கள் முக்கியம்.

ஒன்று, தொழிலாளி வாழ்வதற்குரிய வருமானத்தை அது உறுதி செய்கிறதா, இரண்டாவது வாழ்வதையே உறுதி செய்கிறதா ஆகியனவே. நொய்டாவில் சம்பளம் அவர்கள் வாழ்க்கையை காப்பாற்றவில்லை. சிங்கிதாராவில் பணியாற்றும் தலமும் அவர்களுக்கு பாதுகாப்பு தரவில்லை.

தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் யாரை பாதுகாக்க வேண்டுமோ அவர்களுக்கு எதிராகவே திருத்தி எழுதப்பட்டுள்ளன.

இந்து ஆங்கில நாளிதழில் (01.05.2026) தொழிலாளர் உரிமை கருத்தாளர் ரெஜிமான் குட்டப்பன் எழுதி வெளி வந்துள்ள கட்டுரையின் சாரம். தமிழில்: க.சுவாமிநாதன்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.