மழைநீரில் மூழ்கிய நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு மோடி பெயர்!
9 Oct 2026, 10:13 pm

மழைநீரில் மூழ்கிய நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு மோடி பெயர்!

பாஜக ஆளும் உத்தரப்பிர தேச மாநிலம் கெளதம் புத்த நகர் மாவட்டத்தில் உள்ள ஜெவார்பகுதியில் அமைந்துள்ளது நொய்டா சர்வதேச விமான நிலையம். ரூ.11,000கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம், கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த மழைக்குவெள்ளநீரில் தத்தளித்தது.

இந்நிலையில், மழைநீரில் மூழ்கியநொய்டா சர்வதேச விமானநிலையத்திற்கு ‘நரேந்திர மோடி சர்வதேச விமானநிலையம், நொய்டா-ஜெவார்’ எனப்பெயர் மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு உத்தரப்பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

வெள்ளியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதித்யநாத், “நொய்டா சர்வதேச விமானநிலை யத்தை மாநிலத்திற்குப் பரிசாக வழங்கியதற்காகப் பிரதமர் மோடிக்கு உத்தரப்பிரதேச அமைச்சரவை தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. அதற்கு ‘நரேந்திர மோடி சர்வதேச விமானநிலையம், நொய்டா-ஜெவார்’ எனப் பெயரிடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என அவர் கூறினார்.