தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி நொய்டா அனுபவ் அப்பேரல்ஸ் தொழிலாளர்களின் ஊதியப் போராட்டம்

9 Oct 2026, 9:56 pm
தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி நொய்டா அனுபவ் அப்பேரல்ஸ் தொழிலாளர்களின் ஊதியப் போராட்டம்

தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி நொய்டா அனுபவ் அப்பேரல்ஸ் தொழிலாளர்களின் ஊதியப் போராட்டம்

வேலைநிறுத்தம் 70

நொய்டா“எல்லை தாண்டி ஹரியானாவில் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், நாங்களும் அதே ஆடைத் தயாரிப்பு வேலைகளை இங்கு உத்திரப்பிரதேசத்தில்செய்கிறோம்; ஆனால் ஒப்பந்ததாரர்களின் கொள்ளயால் எங்களுக்குக் கிடைப்பதோ வெறும் சொற்பக் கூலி! எங்கள் அடிப்படை மாதச் சம்பளம் நியாயமான அளவுக்கு உயர்த்தப்படும் வரை ஆலையின் உள்ளே கால் வைக்க மாட்டோம்!” — உத்தரப்பிரதேசம் நொய்டா பிரிவு-2 பகுதிபின்னலாடை உற்பத்தி தொழில் வளாகத்தில் அமைந்துள்ள ‘அனுபவ் அப்பேரல்ஸ்’ (Anubhav Apparel) ஆலை வாயிலில் தொழிலாளர்கள்எழுப்பிய ஆவேசமான குரல் இதுவாகும்.

நொய்டாவில் அமைந்துள்ள முன்னணி ஆடை ஏற்றுமதி நிறுவனமான அனுபவ் அப்பேரல்ஸில், தேக்கமடைந்த உண்மையான ஊதியங்கள், உற்பத்திமதிப்பில் உழைப்பிற்கான பங்கு குறைந்தமை மற்றும் அண்டை மாநிலமான ஹரியானாவுக்கும் உத்திரப்பிரதேசத் திற்கும் இடையேயான பெரும் ஊதியவேறுபாடு ஆகியவற்றுக்கு எதிராகத் தொழிலாளர்கள் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர்.

ஆலையின் பின்னணியும் தேக்கமடைந்த ஊதியமும்

2000-ஆம் ஆண்டில் தேசிய ஆடைவடிவமைப்பு கல்வி நிறுவன (NIFT)முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்ட அனுபவ் அப்பேரல்ஸ், உலகளாவிய பிராண்டுகளுக்காக ஆண்டுக்கு சுமார் 1.5 கோடி ஆடைகளைத்தயாரிக்கும் முன்னணி ஏற்றுமதி நிறுவனமாக வளர்ந்து ள்ளது. இந்நிறுவனத்தின் நொய்டா ஆலைகளில் 3,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதில் 10 முதல் 15 சதவீதப் பணியாளர்கள் மட்டுமேநிர்வாகம் மற்றும் மேற்பார்வைப் பணிகளில் நேரடிப் பணியாளர்களாக உள்ளனர். மீதமுள்ள 85 முதல் 90 சதவீதத் தொழிலாளர்கள் டெய்லர்கள், கட்டர்கள், இயந்திர இயக்குநர்கள் மற்றும் பேக்கர்கள் என மூன்றாம் தரப்பு ஒப்பந்த தாரர்கள் மூலம் உறிஞ்சப்படும்ஒப்பந்தத் தொழிலாளர்களாவார்கள்.கடந்த 20 ஆண்டுகளாக நொய்டா ஆடைத் துறையில் உழைக்கும் வர்க்கத்தின்உண்மையான ஊதியம் தேக்கமடைந்தே வந்துள்ளது. ஏஎஸ்ஐ (Annual Survey of Industries) தரவுகளின்படி, மொத்தமதிப்பு கூட்டலில் (GVA) தொழிலாளர் ஊதியத்தின் பங்கு 2000-2005 காலக்கட்டத்தில் 24-28% ஆக இருந்தது, 2020-2025காலகட்டத்தில் வெறும் 10-12% ஆகக் கடுமையாகக் குறைந்துள்ளது. அண்டை மாநிலமான ஹரியானாவில் தினசரிகுறைந்தபட்ச ஊதியம் ₹585 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், நொய்டா தொழிலாளர்கள் வெறும் ₹435 (மாதம் தோராயமாக ₹13,000) மட்டுமே பெற்று வந்தனர். இந்தத் தீவிர ஊதிய இடைவெளியே தொழிலாளர்களின்போராட்டத்திற்குக் முக்கியக் காரணமாக அமைந்தது.

கடுமையான பணிச்சுமையும் தன்னிச்சையான வேலைநிறுத்தமும்

மணிக்கு 70 ஆடைகளைத் தைக்க வேண்டும் என்ற கடுமையான மற்றும் எதார்த்தத்திற்குப் புறம்பான உற்பத்தி இலக்குகளை நிர்வாகம் விதித்ததாகவும், இயந்திரப் பழுது ஏற்பட்டால் நாள் முழுவது

மான வருகைப்பதிவு ரத்து செய்யப்படும் என மேற்பார்வையாளர்கள் மிரட்டிய தாகவும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர். விலைவாசி உயர்வு மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தால் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்த தொழிலாளர்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் ஒருங்கிணைந்து திடீர் வேலைநிறுத்தத்தில் குதித்தனர்.

ஏப்ரல் 10 அன்று அனுபவ் அப்பே ரல்ஸ் மற்றும் ரிச்சா குளோபல் உள்ளிட்ட அருகாமை ஆலைகளின் ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் ஆலை வாயில்களை விட்டு வெளியேறித் திரண்டனர். நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தைக்கு வருவா ர்கள் என்று காத்திருந்ததொழிலாளர்கள், அவர்கள் வராததால் தாத்ரி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட மோதல்களில் காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக்குண்டு களைப் பிரயோகித்தனர்.

காவல்துறையின் ஒடுக்குமுறையும் இடைக்கால ஊதிய உயர்வும்

நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவிய இந்தப் போராட்டத்தில் சுமார் 42,000 தொழிலாளர்கள் பங்கேற்றனர். 2026 ஏப்ரல் 14-15 தேதிகளில் காவல்துறையினர் நள்ளிரவுச் சோதனைகள் நடத்தி 300-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். போராட்டத்தின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த, உத்தரப்பிரதேச அரசு ஏப்ரல் 18 அன்று குறைந்தபட்ச ஊதியத்தில் 20-21% இடைக்கால உயர்வை அறிவித்தது.

அரசின் அறிவிப்புக்குப் பிறகும், கடுமையான போலீஸ் பாதுகாப்புடனும் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பிய போதிலும், கார்ப்பரேட் லாபவெறிக்கு எதிராகவும் உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் காட்டிய இந்தப் போர்க்குணமிக்க எழுச்சி உத்தரப்பிரதேசத் தொழிலாளர் வரலாற்றில் ஒரு வலிமையான எச்சரிக்கை யாகப் பதிவாகியுள்ளது. தி லெப்ட் வியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.