2026-ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
yesterday
<p>2026 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு, பிரான்ஸை சேர்ந்த ஹென்றி பி. காகன் மற்றும் ஜப்பானை சேர்ந்த கென்சோ சோய் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஒவ்வொரு ஆண்டும், இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்களுக்கு ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி நோபல் பரிசை வழங்கி வருகின்றது. கடந்த அக்.5-ஆம் தேதி, மருத்துவத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த கார்ல் டெய்செரோத், ஜெர்மனியைச் சேர்ந்த பீட்டர் ஹெகேமன், ஜார்ஜ் நாகெல் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டது. நேற்று, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெல்ஜியத்தை சேர்ந்த பிரான்சிஸ் ஹால்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இன்று, வேதியியலுக்கான நோபல் பரிசு, பிரான்ஸை சேர்ந்த ஹென்றி பி. காகன் மற்றும் ஜப்பானை சேர்ந்த கென்சோ சோய் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>சமச்சீரற்ற கரிமத் தொகுப்பில், நேரியல்பற்ற விளைவுகள் மற்றும் தன்வினையூக்கம் ஆகியவற்றை கண்டறிந்ததற்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. </p>
