தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நோபல் 2026: ஒளி, பனி, கண்ணாடி பிம்பம் - எஸ்.கிருஷ்ணசாமி

31 Oct 2026, 9:27 pm
நோபல் 2026: ஒளி, பனி, கண்ணாடி பிம்பம் -  எஸ்.கிருஷ்ணசாமி

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் உலகமே ஸ்வீடனை நோக்கித் திரும்புகிறது. அங்கிருந்துதான் நோபல் பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன. 2026இல் அறிவியலுக்கான பரிசுகள் ஒளி, பனி, கண்ணாடி பிம்பம் ஆகிய மூன்று அதிசயங்களுக்குக் கிடைத்துள்ளன. அவை என்ன? நமக்கு அவை சொல்லும் பாடம் என்ன?

மருத்துவம்: ஒளியால் இயங்கும் மூளை

ஒரு சிறிய பாசியில் ஒளியை உணரும் புரதங்கள் இருப்பதை பீட்டர் ஹெகமான் கண்டுபிடித்தார். அவை நரம்புகளின் மின் சமிக்ஞைகளைக் கட்டுப்படுத்தும் என்பதை தவளை முட்டைகளில் சோதித்துக் காட்டினார் ஜார்ஜ் நாகெல்.

2005இல் கார்ல் டைசரோத் அந்தப் புரதத்தின் மரபணுவை எலியின் நரம்பு செல்களில் பொருத்தினார். இப்போது ஒளியைப் பாய்ச்சினால் நரம்புகள் இயங்கின! ஒளியைக் கொண்டே எலியின் மீசையை அசைக்க வைத்தனர். ஆபத்து எதுவும் இல்லாதபோதும் எலிக்கு பயத்தின் நினைவைத் தூண்டிக் காட்டினர். ‘ஒளி மரபியல்’ (Optogenetics) எனும் இந்த முறை மூளை ஆய்வையே மாற்றியமைத்துவிட்டது.

இயற்பியல்: பனிக்குள் ஒரு தொலைநோக்கி

நியூட்ரினோக்கள் என்பவை மிக நுண்ணிய துகள்கள். சுவர், மலை, ஏன் நம் உடலைக்கூட எதையும் தொடாமல் ஊடுருவிச் சென்றுவிடும். அவற்றைப் பிடிப்பது மிகக் கடினம்.

அண்டார்டிகாவின் பனியையே கருவியாகப் பயன்படுத்தலாம் என்று 1988இல் பிரான்சிஸ் ஹால்சன் யோசனை கூறினார். தென் துருவத்தில், ஒரு கன கிலோமீட்டர் பனிக்குள் 5,160 ஒளி உணரிகளைப் புதைத்து ‘ஐஸ்கியூப்’ என்ற ஆய்வகத்தை அவர் தலைமையில் உருவாக்கினர். 2013இல் விண்வெளியின் தொலைதூரத்திலிருந்து வந்த நியூட்ரினோக்களைக் கண்டறிந்தனர். வெடிக்கும் விண்மீன்களைப் பற்றி அறிய இது புதிய சாளரம்.

நாம் சிந்திக்க வேண்டியது

நோபல் பரிசு வெல்வதே இலக்கு அல்ல. பெரிய கண்டுபிடிப்புகளை உத்தரவு போட்டு வரவழைக்க முடியாது. அவை ஆர்வத்திலிருந்தும், கேள்வி கேட்கும் சுதந்திரத்திலிருந்தும், தொடர்ந்த நிதியுதவியிலிருந்தும் பிறக்கின்றன.

மனப்பாடக் கல்வி, அதிகாரக் கெடுபிடி மிகுந்த ஆய்வகங்கள், சாதி அடுக்குகள் ஆகியவை புதிய சிந்தனையைத் தடுக்கின்றன. எல்லா சாதி, வர்க்கப் பின்னணியிலிருந்தும் வரும் திறமையாளர்கள் வளர வாய்ப்பு வேண்டும். அறிவியல் மனப்பான்மையோடு கேள்வி கேட்போம்!

வேதியியல்: கண்ணாடி பிம்ப மூலக்கூறுகள்

நம் இடது கையும் வலது கையும் ஒன்று போலத் தோன்றும்; ஆனால் ஒன்றின் மேல் ஒன்றைச் சரியாகப் பொருத்த முடியாது. சில மூலக்கூறுகளும் இப்படி இரட்டை வடிவங்களில் இருக்கின்றன.

மருந்துகளில் இது மிக முக்கியம். ஒரு வடிவம் நோயைக் குணப்படுத்தும்; மற்ற வடிவம் தீங்கு செய்யக்கூடும். வேதிவினையில் ஒரு வடிவம் மட்டும் அதிகம் உருவாகும் வழியை ஹென்றி காகன் 1986இல் காட்டினார். கென்சோ சோவாய் 1995இல் 2% ஆக இருந்த ஒரு வடிவத்தை 87% ஆக உயர்த்தினார்; 2003இல் ஒரே ஒரு வடிவம் மட்டுமே உருவாகும் வினையை வடிவமைத்தார்.

வீட்டிலேயே செய்து பாருங்கள்

உங்கள் வலது கையைக் கண்ணாடியில் பாருங்கள். பிம்பம் இடது கை போலத் தெரியும்!வலது கை கையுறையை இடது கையில் அணிந்து பாருங்கள். பொருந்தாது. கண்ணாடி பிம்ப மூலக்கூறுகளும் இப்படித்தான்.

அமைதி: நவி பிள்ளை

தென்னாப்பிரிக்காவில் பிறந்த நவி பிள்ளை, நிறவெறிக்கு எதிராகப் போராடியவர்களுக்காக நீதிமன்றத்தில் வாதாடினார். ருவாண்டா போர்க்குற்ற நீதிமன்றத்தின் தலைவராகவும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையராகவும் பணியாற்றினார். போர்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் மிகப்பெரிய குற்றங்களாகக் கருத வேண்டும் என்று நிலைநாட்டினார். வலியவருக்கும் எளியவருக்கும் சட்டம் ஒன்றே என்பது அவரது உறுதியான நிலைப்பாடு.

உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவில் இருந்து ஆய்வு செய்து அறிவியல் நோபல் வென்றவர் சி.வி. ராமன் மட்டுமே (1930). அதன் பிறகு யாரும் இல்லை.

நமது தேனி மாவட்டத்தில் மலைக்கு அடியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. எதிர்ப்புகளால் அது நின்றுபோனது.

ஆராய்ச்சிக்கு இந்தியா செலவிடுவது நாட்டின் மொத்த உற்பத்தியில் 0.65% மட்டுமே. தென்கொரியா 5.65%, அமெரிக்கா 3.4%, சீனா 2.8% செலவிடுகின்றன.மகாத்மா காந்தி ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டும் அமைதிக்கான நோபல் பெறவில்லை!

புதிய சொற்கள்

புரதம் (Protein) – உயிரினங்களின் உடலில் பல வேலைகளைச் செய்யும் மூலக்கூறுமரபணு (Gene) – உடலின் பண்புகளைத் தீர்மானிக்கும் குறிப்புகள்நியூட்ரினோ (Neutrino) – எதனையும் ஊடுருவிச் செல்லும் நுண்ணிய துகள்வினையூக்கி (Catalyst) – வேதிவினையை விரைவுபடுத்தும் பொருள்

பீப்பிள்ஸ் டெமாக்ரசி (2026 அக்டோபர் 18) ஏட்டில் வெளியான எஸ். கிருஷ்ணசாமியின் A Nobel view: India needs change கட்டுரையின் குழந்தைகளுக்கான எளிய வடிவம்: ராஜூ பாய்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.