2026-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
9 Oct 2026, 3:59 pm
<p>2026-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தென் ஆப்ரிக்கா நாட்டவருமான நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>ஒவ்வொரு ஆண்டும், இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்களுக்கு ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி நோபல் பரிசை வழங்கி வருகின்றது. கடந்த அக்.5-ஆம் தேதி, மருத்துவத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த கார்ல் டெய்செரோத், ஜெர்மனியைச் சேர்ந்த பீட்டர் ஹெகேமன், ஜார்ஜ் நாகெல் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த அக்.6-ஆம் தேதி இயற்பியலுக்கான நோபல் பரிசு பெல்ஜியத்தை சேர்ந்த பிரான்சிஸ் ஹால்சனுக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த அக்.7-ஆம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசு, பிரான்ஸை சேர்ந்த ஹென்றி பி. காகன் மற்றும் ஜப்பானை சேர்ந்த கென்சோ சோய் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. நேற்று, இலக்கியத்திற்கான நோபல் பரிசு கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தென் ஆப்ரிக்கா நாட்டவருமான நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.</p><p>காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக உலகிற்கு உரக்கச் சொன்னவர், நவநீதம் பிள்ளை. 2021 முதல் 2025 வரை பாலஸ்தீன மக்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த ஐ.நா. சபையின் விசாரணை ஆணையத்தின் தலைவராக இருந்தபோது, “இஸ்ரேல் அரசு இனப்படுகொலை செய்கிறது” என அறிவித்து இறுதி அறிக்கையை வெளியிட்டார். நெல்சன் மண்டேலா மற்றும் ராபன் தீவு சிறைக்கைதிகளுக்கு ஆதரவாக நின்றது முதல், தற்காலத்தின் அனைத்து முக்கிய சர்வதேச நீதிமன்ற வழக்குகளிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.</p><p>சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வரும் நவநீதம் அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்த அவர் எடுத்த முயற்சிகளுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.</p>
