தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடிநீர் விநியோகம் இல்லை பெரம்பலூர் 21 ஆவது வார்டு  கவுன்சிலர், பொதுமக்கள் தர்ணா

3 Dec 2025, 2:59 pm
குடிநீர் விநியோகம் இல்லை பெரம்பலூர் 21 ஆவது வார்டு  கவுன்சிலர், பொதுமக்கள் தர்ணா
<p><strong>குடிநீர் விநியோகம் இல்லை பெரம்பலூர் 21 ஆவது வார்டு &nbsp;கவுன்சிலர், பொதுமக்கள் தர்ணா</strong></p> <p>பெரம்பலூர், டிச.3 - பெரம்பலூர் நகராட்சிக்கு &nbsp;உட்பட்ட 21 ஆவது வார்டு &nbsp;கவுன்சிலர் பழனிசாமி, தனது &nbsp;வார்டு பொது மக்களுடன் செவ்வாய்க்கிழமை நக ராட்சி அலுவலகத்திற்கு வந்து &nbsp;திடீரென்று தர்ணா போ ராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டம் குறித்து &nbsp;பொதுமக்கள் கூறுகையில், &nbsp;&ldquo;தங்களது வார்டில் காவிரி &nbsp;குடிநீர் கடந்த 20 நாட்களுக்கு மேலாக விநியோகிக்கப் படவில்லை. இதனால் குடிக்க நீர் இல்லாமல் தவித்து வருகிறோம். குடிநீர் விநியோ கிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்&rdquo; என்றனர். &nbsp;இதுகுறித்து தகவ லறிந்த நகராட்சி அலுவ லர்கள் கூறுகையில், &ldquo;பெரம் பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது &nbsp;கொள்ளிடம்-காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவ தால், குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே பழுதடைந்து வருகிறது. &nbsp;இதனை அவ்வப் போது சரி செய்து அப்பகுதி &nbsp;மக்களுக்கு குடிநீர் விநியோ கிக்கப்பட்டு வருகிறது. 21- ஆவது வார்டுக்கு செல்லும் &nbsp;குடிநீர் குழாயும் சேதம டைந்ததால் தற்போது சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் குடிநீர் விநி யோகிக்கப்படும்&rdquo; என்றனர். &nbsp;பின்னர் பொதுமக்கள் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.