பாஜக கூட்டணிக்கு ‘நோ ஓட்’! திருச்சியில் சீறிய 84 விவசாய சங்கங்கள்! அய்யாக்கண்ணுவின் அதிரடி ‘யு-டர்ன்’!
30 Mar 2026, 3:40 pm
<p><strong>பாஜக கூட்டணிக்கு ‘நோ ஓட்’! திருச்சியில் சீறிய 84 விவசாய சங்கங்கள்! அய்யாக்கண்ணுவின் அதிரடி ‘யு-டர்ன்’!</strong></p>
<p>விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் கொள்கைகளைத் தொடர்ந்து அமல்படுத்தி வரும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப் போவதாக, தமிழ்நாட்டின் 84 விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அதிரடியாகஅறிவித்துள்ளது. பாஜகவிற்கு எதிராகத் திரண்ட விவசாயிகள்! திருச்சியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காவிரி தனபால் மற்றும் கே.வி. இளங்கீரன் உள்ளிட்ட முக்கிய விவசாய சங்கத் தலைவர்கள் பங்கேற்றனர். ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கு, குறிப்பாக மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தைப் புறக்கணிப்பது, மரபணு மாற்றப்பட்ட பயிர்களை இறக்குமதி செய்து உள்நாட்டு விவசாயத்தை அழிப்பது மற்றும் விளைபொருட்களுக்கு முறையான ஆதார விலை (MSP) வழங்க மறுப்பது போன்ற செயல்களுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அய்யாக்கண்ணுவின் அரசியல் திருப்பம்! இந்தக் கூட்டத்தின் முக்கியத் திருப்பமாக, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணுவின் நிலைப்பாடு அமைந்தது. கடந்த மார்ச் 14-ஆம் தேதி பி.ஆர். பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திமுகவிற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற அய்யாக்கண்ணு, அந்தப் பழைய முடிவில் தனக்கு உடன்பாடில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார். விவசாயிகளின் 68 கோரிக்கைகளை எந்தக் கட்சி ஏற்றுக்கொள்கிறதோ, அந்தக் கட்சிக்கே தங்களின் ஆதரவு உண்டு என்றும், விவசாயிகளை வஞ்சித்த பாஜக கூட்டணிக்கு ஒரு ஓட்டு கூடப் போடப் போவ தில்லை என்றும் அவர் தனது நிலப்பாட்டை அதிரடியாக மாற்றிக்கொண்டார். 68 கோரிக்கைகளும்.. இறுதி எச்சரிக்கையும்! “விவசாயிகள் வெறும் வாக்கு வங்கி அல்ல; நாட்டின் முதுகெலும்பு” என்பதை நிரூபிக்கும் வகையில், தங்கள் கோரிக்கைகளை ஏற்காத கட்சிகளைத் தண்டிப்போம் என விவசாயிகள் முழக்கமிட்டுள்ளனர். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழக விவசாயிகளின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்ததற்குத் தேர்தல் முடிவுகள் சாட்சியாக இருக்கும் என சங்க நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.</p>
<p> </p>
