தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கார்ப்பரேட் காட்டாட்சி வேண்டாம், தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம்!

3 Dec 2025, 2:59 pm
கார்ப்பரேட் காட்டாட்சி வேண்டாம், தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம்!
<p><strong>கார்ப்பரேட் காட்டாட்சி வேண்டாம், தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும்&nbsp;</strong></p> <p>புதுதில்லி, டிச. 3 - புதிய தொழிலாளர் சட்டங் களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளா கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நரேந்திர மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசு, &nbsp;தொழிலாளர்களை நலச் சட்டங்களை ஒழித்துக் கட்டி யுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு &nbsp;நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட 4 புதிய தொழிலாளர் சட்டங்களை (Four Labour Codes) 5 ஆண்டுகளுக்குப் பிறகு &nbsp;அமல்படுத்தியுள்ளது. 12 மணி நேரம் வரை தொழி லாளியிடம் வேலை வாங்கலாம்; உரிமமே இல்லாமல், தொழி லாளியின் சம்மதமின்றி 3 மாதத்திற்கு 125 மணி நேரம் வரை &nbsp;ஓவர் டைம் வேலை வாங்க லாம்; சட்டச் சலுகைகள் இல்லாமல் 50 பேர்களைக் கூட ஒப்பந்தத் தொழிலாளர்களாக வைத்திருக்க லாம்; ரூ. 18 ஆயிரம் சம்பளம் பெறுபவர்கள் தொழிலாளர்களாக கருதப்பட மாட்டார்கள்; அவர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தை அரசு நிர்ணயிக்க வேண்டியது கட்டாயமல்ல; 40 தொழிலாளர்களுக்கு குறைவாக பணியாற்றும் நிறுவனங்கள் இனி தொழிற்சாலை சட்டத்தின் கீழ் வராது; நிறுவனம் நடத்துவோர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 12 சதவிகிதத்திற்குப் பதில் இனி 10 சதவிகிதம் பங்களிப்பு செலுத்தினால் போதுமானது; தொழிற்சாலைகளை ஆய்வுசெய்ய அரசு அனுமதி இல்லாமல் அதிகாரிகள் செல்லக் கூடாது என்று சட்ட விதிகளைத் திருத்தியுள்ளது. இதனைத் திரும்பப் பெற வேண்டும், இடதுசாரி கட்சிகள், தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான புதனன்று, அமர்வு தொடங்குவதற்கு முன்னதாக இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். கார்ப்பரேட் காட்டாட்சி வேண்டாம், தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும் என்ற பேனருடன், இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முழக்கமிட்டு தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.