முந்தய பக்கம்

மருத்துவர் பரிந்துரையின்றி சிரப்கள் விற்கக்கூடாது - ஒன்றிய சுகாதார அமைச்சகம்

16 Jun 2026, 1:30 pm
மருத்துவர் பரிந்துரையின்றி சிரப்கள் விற்கக்கூடாது - ஒன்றிய சுகாதார அமைச்சகம்

இருமல் மருத்து உட்பட அனைத்து வகையான சிரப்களையும், மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் விற்கக்கூடாது என ஒன்றிய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கலப்படம் செய்யப்பட்ட இருமல் மருந்துகளால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்களை தொடர்ந்து இந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. 1945 ஆம் ஆண்டு மருந்து விதிகளில் கொண்டுவரப்பட்ட புதிய திருத்தத்தின்படி, அட்டவணை 'K' இல் இருந்து சிரப்களை நீக்கியுள்ளது ஒன்றிய சுகாதார அமைச்சகம்.

இந்தத் திருத்தத்தின்படி, நுகர்வோர் மருந்தகங்களிலிருந்து இருமல் மருத்து உட்பட அனைத்து வகையான சிரப்களை வாங்குவதற்கு முன்பு மருத்துவரின் பரிந்துரைச் சீட்டைப் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram