தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நியாயமற்ற காரணங்களை இனியும் கூறக்கூடாது! மெட்ரோ திட்டங்களுக்கு பிரதமர் அனுமதி அளிப்பாரா?

2 Mar 2026, 3:30 pm
நியாயமற்ற காரணங்களை இனியும் கூறக்கூடாது! மெட்ரோ திட்டங்களுக்கு பிரதமர் அனுமதி அளிப்பாரா?
<p><strong>நியாயமற்ற காரணங்களை இனியும் கூறக்கூடாது! மெட்ரோ திட்டங்களுக்கு பிரதமர் அனுமதி அளிப்பாரா?</strong></p> <p>சு.வெங்கடேசன் &nbsp;எம்.பி., கேள்வி மதுரை, மார்ச் 2 - நியாயமற்ற காரணங்கள் கூறு வதைக் கைவிட்டு, இனியாவது, மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்க பிரதமர் மோடி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறி யுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறி யிருப்பதாவது: நாடாளுமன்றத்தில் அவசரமான பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை விவாதிக்க விதி எண் 377 கீழ் மதுரை மெட்ரோ பற்றி நான் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற &nbsp;விவகாரங்கள் துறை இணை அமைச் சர் தோகன் சாஹு பதில் அளித்து உள்ளார். மக்கள் தொகை, பயணிகளின் அடர்த்தி ஆகிய காரணங்களால் திருப்பி அனுப்பப்பட்டதையே மீண்டும் தெரிவித்துள்ளார். இருபது லட்சத்துக்கு குறைவான &nbsp;மக்கள் தொகை இருக்கும் ஆக்ரா, போபால், மீரட், குருகிராம், பாட்னா ஆகிய நகரங்களுக்கு மெட்ரோ இரயில் திட்ட அனுமதியை கொடுத்த ஒன்றிய அரசு மதுரை, கோவைக்கு ஏன் தர மறுக்கிறது? 2024-ஆம் ஆண்டில் மட்டும் மதுரைக்கு 2.74 கோடி உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், சுமார் 1 லட்சம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பய ணிகளும் வந்துள்ளனர். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மட்டும் தினசரி &nbsp;15,000 முதல் 20,000 பேர் வருகின்ற னர். திருவிழாவின் போது இந்த எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டு கிறது. இது ஆக்ராவின் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட அதிகம். ஆக்ராவுக்கு மெட்ரோ அனுமதி வழங்கப்பட்டபோது, அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளே முக்கிய கார ணமாக சொல்லப்பட்டது. ஆனால் ஆக்ராவை விட அதிக சுற்றுலா பய ணிகள் வந்து செல்லும் மதுரைக்கு மறுக்க என்ன நியாயம்? இந்த கேள்வியை, ஒன்றிய ஆளும் கட்சியான பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் தமிழ்நாட் டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி &nbsp;பழனிசாமி கேட்பாரா? மதுரை மற்றும் கோவை மெட்ரோ &nbsp;திட்டத்தை நியாயமற்ற காரணத்தை &nbsp;சொல்லி மறுக்கும் முடிவை ஒன்றிய &nbsp;அரசு கைவிட வேண்டும் என்று கோரு கிறேன். இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.