முந்தய பக்கம்

எஸ்ஐஆருக்கு கூடுதல் அவகாசம் இல்லை!

24 Nov 2025, 3:26 pm
எஸ்ஐஆருக்கு கூடுதல் அவகாசம் இல்லை!

எஸ்ஐஆருக்கு கூடுதல் அவகாசம் இல்லை! தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

சென்னை, நவ. 24 - தமிழக தலைமை தேர்தல் அதி காரி அர்ச்சனா பட்நாயக் திங்கள ன்று, செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது, “தமிழகம் முழுவதும் 6.16 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன; எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் கூடுதல் அவகாசத்திற்கு வாய்ப்பில்லை” என்றார்.  “எஸ்.ஐ.ஆர். பணிகளை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க வேண்டும். படிவங்களை பெற்ற வாக்காளர்கள் முடிந்தவரை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்; மக்க ளுக்கு அளிக்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களில் 50 சதவிகிதம் திரும்ப பெறப்பட்டுள்ளன; 2 லட்சம் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்டு அனுப்பப் பட்டுள்ளன” என்று தெரிவித்த அர்ச்சனா பட்நாயக், “வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் எஸ்.ஐ.ஆர் படிவத்தில் நிச்சயம் பெயர் இருக்கும். கணக்கீட்டுப் படிவங்களில் தகவல்கள் சரியாக இருந்தால் எந்த படிவமும் நிராகரிக்கப்படாது. பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்தால் உரிய காரணம் தெரிவிக்கப்படும்” என்றார். பெயர் இடம்பெறாவிட்டால் காரணம் தெரிவிக்கப்பட வேண்டும்.  எஸ்.ஐ.ஆர் ஆன்லைன் சர்வர்  சரியாக செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது. ஒருவர் தவறான ஆவணத்தை கொடுக்கிறார் எனில், அதை பி.எல்.ஓ.க்கள்தான் கண்டு பிடிக்க முடியும். டிசம்பர் 4 வரை  எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கும் பணி நடைபெறும். 33,000 தன்னார் வலர்கள், 88 ஆயிரம் பி.எல்.ஓ.க் கள் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடு பட்டுள்ளனர். 327 பி.எல்.ஓ.க்கள் தங்கள் எஸ்.ஐ.ஆர் பணிகளை முழுமையாக நிறைவு செய்துள்ளனர் என்று கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram