தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பள்ளி வளாகங்களில் தேவையின்றி யாரும் நுழைய அனுமதி கிடையாது! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்

10 Jul 2026, 8:50 pm
பள்ளி வளாகங்களில் தேவையின்றி  யாரும் நுழைய அனுமதி கிடையாது! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்
<p><strong>பள்ளி வளாகங்களில் தேவையின்றி யாரும் நுழைய அனுமதி கிடையாது! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்</strong></p><p>சென்னை, ஜூலை 10 - இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி யாரும் நுழைய அனுமதி இல்லை என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். அரசுப் பள்ளிகளில் அண்மைக் காலமாக தவெகவினர் மேற்கொண்ட ஆய்வு, முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் விழா பள்ளிகளில் கொண்டாடப்பட்டது உள்ளிட்ட நிகழ்வு கள் பெரும் விமர்சனத்தையும் சர்ச்சை யையும் ஏற்படுத்தியிருந்த நிலையில், அமைச்சர் இந்த அறிக்கையை வெளி யிட்டார். கல்விக் கூடங்கள் காட்சிக் கூடங்கள் அல்ல எனவும், பள்ளிக்கூடம் அரசிய லின் மேடை அல்ல எனவும் தெரிவித்த அவர், அரசு சார்பில் நடத்தப்படும் அதி காரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட அரசு சாராத நிகழ்வுகள் பள்ளிகளில் நடத்தப் படக் கூடாது என்றார். எந்த அரசியல் கட்சியினரும், தனி யார் அமைப்பினரும் நேரடியாக மாண வர்களைச் சந்திக்க அனுமதி இல்லை என்றும், வகுப்பு நடைபெறும் நேரத்தில் எக்காரணத்திற்காகவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ மாணவர் களைச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இது தொடர்பான விரி வான நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை விரைவில் வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.