ரயில் தடத்தில் யானைகள் உயிரிழப்புகள் இல்லை
20 Dec 2025, 3:38 pm
<p>கோவை, டிச.20- கோவை மாவட்டம், மதுக் கரை பகுதியில் ரயில் தடத் தில் கடந்த இரண்டு ஆண்டு களாக ஒரு யானை கூட உயிரி ழக்கவில்லை. முன்பு பல யானைகள் ரயில் மோதலில் இறந்த அதே தடத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம், 2022 இல் அமைக்கப்பட்ட ஏஐ அடிப்படையிலான யானை முன்னெச் சரிக்கை அமைப்பு (Madukkarai AI Elephant Centre). இதுவரை சுமார் 6,000 யானைகள் பாதுகாப்பாக ரயில் தடத்தைக்கடந்துள்ளன. இதுகுறித்து இந்திய வனத்துறை அதி காரி சுப்ரியா சாகு தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது, எனது குழுவுடன் ஏஐ மையத்தை பார்வையிட்டேன். மதுக் கரை தடத்தில் 2 ஆண்டுகளாக யானை உயிரி ழப்பு இல்லை. தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்தினால் மனித-யானை மோத லைத் தவிர்க்க முடியும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. இந்த ஏஐ அமைப்பு யானைகளை கண்ட றிந்து உடனடியாக ரயில்வே நிர்வாகத்துக்கு எச்சரிக்கை அனுப்புவதால், ரயில் வேகத் தைக் குறைத்து யானைகள் பாதுகாப்பாக கடக்க உதவுகிறது என்று தனது எக்ஸ் பதி வில் தெரிவித்துள்ளார். இதை வனத்துறை மற்றும் தன்னார்வலர் கள் வரவேற்றுள்ளனர். இதே போன்ற அமைப்பு மற்ற ரயில் தடங்களிலும் அமைக் கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள் ளது.</p>
