தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பேரூராட்சித் தலைவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

11 Dec 2025, 5:47 pm
பேரூராட்சித் தலைவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி
<p><strong>பேரூராட்சித் தலைவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி</strong></p> <p>ஈரோடு, டிச.11- கொடுமுடி பேரூராட்சித் தலைவர் &nbsp;மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை யில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி பேரூ ராட்சித் தலைவராக திலகவதி சுப்பிர மணியம் (திமுக), துணைத்தலைவராக கமல்ஹாசன் (திமுக) ஆகியோர் உள்ளனர். இவர்கள் உட்பட 8 திமுக &nbsp;உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த 3 பேர், சுயேச்சையாக 3 &nbsp;பேர், அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் என &nbsp;மொத்தம் 15 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதனிடையே தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப் பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறு பாடு காரணமாக தலைவர் திலகவதி சுப் பிரமணியம் மீது நம்பிக்கையில்லா தீர் மானம் கொண்டு வரப்பட்டது. இதில் &nbsp;15 வார்டு உறுப்பினர்களில் 12 உறுப்பி னர்களின் ஆதரவோடு, நம்பிக்கை யில்லா தீர்மானம் வெற்றிபெற்று, தலை வர் திலகவதி சுப்பிரமணியம் தலைவர் &nbsp;பதவியில் நீக்கப்பட்டதாக அரசாணை &nbsp;வெளியிடப்பட்டது. இந்நிலையில், தேர் தல் முறையாக நடத்தப்படவில்லை என்றுக்கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் திலகவதி சுப்பிரமணியம் தடையாணை பெற்றார். அதனை ரத்து &nbsp;செய்ய உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந் தனர். இதைத்தொடர்ந்து உயர்நீதி மன்ற உத்தரவுப்படி மீண்டும் இரண்டா வது முறையாக நவ.11 ஆம் தேதி வாக் கெடுப்பு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. ஆனால், அந்நாளில் வார்டு உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் துணைத்தலைவர் கமல்ஹாசன் மற்றும் 13 ஆவது வார்டு உறுப்பினர் முனிராஜ் ஆகியோர், முதல்முறை நம்பிக்கையில்லா தீா்மா னம் நிறைவேற்றப்பட்டு, தலைவர் பதவி &nbsp;நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என &nbsp;அறிவிக்க வேண்டும் என தில்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களது வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது. இதனால், மீண்டும் டிச.10 ஆம் &nbsp;தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு, ஈரோடு கோட் டாட்சியர் முன்னிலையில் தேர்தல் &nbsp;நடத்தும் அலுவலர் வாக்கெடுப்பு நடத்தி &nbsp;அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந் நிலையில், தலைவர் மீது மூன்றாவது முறையாக நம்பிக்கையில்லா தீர்மா னம் கொண்டு வருவதற்கான கூட்டம் &nbsp;கொடுமுடி பேரூராட்சி அலுவலக கூட் டரங்கில் புதனன்று நடைபெற்றது. கோட்டாட்சியர் சிந்துஜா முன்னிலை யில் தேர்தல் நடத்தும் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான சாகுல் ஹமீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தி னார். இதில் 15 வார்டு உறுப்பினர்க ளில் 5 பேர் மட்டுமே கலந்து கொண்ட னர். வாக்கெடுப்பில் கலந்து கொண்ட &nbsp;5 பேரும் நம்பிக்கையில்லா தீர்மானத் திற்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து நம்பிக்கையில்லா தீர் மானம் தோல்வியடைந்தது என்று பதிவு செய்யப்பட்டு, கூட்டத்தில் கலந்து கொண்ட ஐந்து உறுப்பினர்களும் கையொப்பமிட்டனர். தொடர்ந்து நம் பிக்கையில்லா தீர்மானம் தோல்விய டைந்ததாக அறிவிக்கப்பட்டு, சென்னை &nbsp;உயா்நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக் கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.