தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையில் சமரசம் இல்லை: முதல்வர் விஜய்!
10 Aug 2026, 9:42 pm

தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையில் சமரசம் இல்லை: முதல்வர் விஜய்!

சென்னை, ஆக. 10 -“தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையில் எவ்வித சமரசமும் கிடையாது” என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கூறினார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகையில் விஜய் கூறியதாவது:

தமிழ் என்றால் பவர்

தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல அது நமது உயிர். உணர்வு. தாய் எப்படி புனிதமோ அதைப் போன்றது தாய் மொழியும். உலகில் உண்மை வாய்ந்த செம்மொழியாகவும், மிகப் பழமையான நாகரிகமாகவும் திகழ்கிறது தமிழ். இயற்கையில் இந்தியாவின் நெற்றியில் இருக்கும் பொட்டுத் தான் தமிழ் மொழி. தமிழும் தமிழனும் இல்லாத நாடு எது? தமிழ் ஒரு சிந்தனை. தமிழ் என்றால் அன்பு. தமிழ் என்றால் கெத்து. தமிழ் என்றால் பவர். தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல் இடத்தில் இருக்கும்.

சமரசம் இருக்காது

தமிழ் என்று சொன்னால் ஒட்டுமொத்த தமிழ்நாடு ஒன்றாக வந்து நிற்கும். தமிழ் என்பது ஒரு பண்பாடு. தமிழ் என்பது ஒரு நாகரிகம். தமிழை பின்னுக்குத் தள்ளினால் தமிழ்நாடு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. தமிழ் என்பது பெயரோ ஒரு சொல்லோ கிடையாது. வரலாறு என்றால் அது தமிழ் தான், தமிழ் ஒட்டுமொத்த உயிர் மூச்சு. தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையை பாதுகாப்பதில் தவெக அரசு சமரசம் செய்யாது.

“தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று கூறுவது அரசியல் சார்ந்த விவாதமாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளை கடந்து ஒன்றிணைந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.