எரிசக்தி நிலையங்கள் மீது 5 நாட்களுக்கு தாக்குதல் இல்லை! பின்வாங்கிய டிரம்ப்
23 Mar 2026, 3:39 pm
<p><strong>எரிசக்தி நிலையங்கள் மீது 5 நாட்களுக்கு தாக்குதல் இல்லை! பின்வாங்கிய டிரம்ப்</strong></p>
<p>வாஷிங்டன், மார்ச் 23 - உலகம் முழுவதும் எரிசக்தி தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் ஹோர்முஸ் நீரிணையை 48 மணி நேரத்துக்குள் முழுமையாக திறக்க வேண்டும். இல்லையென்றால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவேன் என டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு, அமெரிக்காவிற்கு உதவி செய்யும் நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது பதில் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் கொடுத்தது. இதையடுத்து, ஈரானுடன் ‘நல்ல மற்றும் ஆக்கப்பூர்வமான’ பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக வும், இதன் காரணமாக, ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான ராணு வத் தாக்குதல்களை ஐந்து நாட் களுக்கு ஒத்திவைக்க தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ள தாகவும் டிரம்ப் தனது நிலைபாட்டி லிருந்து பின் வாங்கியுள்ளார். ஈரானுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக டிரம்ப் கூறியுள்ள நிலையில், அதனை ஈரான் மறுத்துள்ளது. </p>
