முந்தய பக்கம்

“நோ கூட்டணி... ஒன்லி தனிப்பயணம்!” டாக்டர் கிருஷ்ணசாமியின் அதிரடி கிளினிக்!

27 Mar 2026, 3:15 pm
“நோ கூட்டணி... ஒன்லி தனிப்பயணம்!”  டாக்டர் கிருஷ்ணசாமியின் அதிரடி கிளினிக்!
<p><strong>&ldquo;நோ கூட்டணி... ஒன்லி தனிப்பயணம்!&rdquo;&nbsp;&nbsp;டாக்டர் கிருஷ்ணசாமியின் அதிரடி கிளினிக்!</strong></p> <p>கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு எனத் தமிழக அரசியல் களம் களைகட்டியிருக்க, &ldquo;யாரையும் நம்பிப் பிரயோஜனம் இல்லை&rdquo; எனத் தனது ஸ்டெதாஸ்கோப்பை கழற்றி வைத்துவிட்டுத் கவலையில் ஆழ்ந்திருக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. கோவை குனியமுத்தூர் இல்லத்தையே நேர்காணல் மையமாக மாற்றிவிட்டார். ஏற்கெனவே 300 பேரை &lsquo;செக்கப்&rsquo; செய்து, அதில் 60 &lsquo;பிட்&rsquo; ஆன வேட்பாளர்களைத் தயார் செய்துவிட்டா ராம். இன்னும் 10 மாவட்டங்களுக்கு &lsquo;அப்பாயிண்ட்மென்ட்&rsquo; பாக்கி இருக்கிறதாம்! &ldquo;அதிமுகவிடம் ஒரு ராஜ்யசபா சீட் கேட்டோம், அவர்கள் கொடுக்கவில்லை&rdquo; என வருத்தப்பட்டவர், &ldquo;எங்களை அவமரியாதை செய்துவிட்டார்கள்&rdquo; என &lsquo;சென்டிமென்ட்&rsquo; டச்சும் கொடுத்திருக்கிறார். 120 தொகுதிகளில் நாங்கள் செம ஸ்ட்ராங் எனத் தசை முறுக்கும் டாக்டர், அடுத்த இரண்டு நாட்களில் வேட்பாளர் பட்டியலை ரிலீஸ் செய்யப்போவதாக தமிழக &nbsp;வாக்காளர்களை மிரட்டியிருக்கிறார்.சுருக்கமா சொல்லப்போனா கூட்டணிக்குக் காத்திருந்தது போதும் என முடிவெடுத்து, &ldquo;தனித்துப் போட்டியிட்டு தன் பலத்தைக் காட்டப் போகிறேன்&rdquo; என டாக்டர் இப்போது முழு வீச்சில் &lsquo;ஆபரேஷனில் இறங்கியிருக்கிறார். இதனால் அவரை வைத்துக் கணக்கு போட்டவர்கள் எல்லாம் பதறிப்போயிருக்கிறார்களாம்.</p>
Share
FacebookXWhatsAppTelegram