தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்களவை சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மார்ச் 9 விவாதம்!

15 Feb 2026, 3:03 pm
மக்களவை சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மார்ச் 9 விவாதம்!
<p><strong>மக்களவை சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மார்ச் 9 விவாதம்!</strong></p> <p>புதுதில்லி, பிப். 15 மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மார்ச் 9-ஆம் தேதி விவாதிக்கப்படும் என ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். சர்ச்சையின் பின்னணி 2026 பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில், முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனேவின் &ldquo;போர் ஸ்டார்ஸ்&rdquo; புத்தகக் குறிப்புகள் குறித்துப் பேச எதிர்க்கட்சித் தலை வர் ராகுல் காந்திக்குச் சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதைக் கண்டித்து &lsquo;இந்தியா&rsquo; &nbsp;கூட்டணி எம்.பி.க்கள் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் கேள்வி களுக்கு அஞ்சி பிரதமர் மோடி அவைக்கு &nbsp;வராத நிலையில், பிப்ரவரி 5- அன்று பிரத மரின் பதிலுரை இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் வராதது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர், &ldquo;எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் தாக்க முயன்றதால்தான் பிரத மரை வரவேண்டாம் என நான் கூறினேன்&rdquo; என ஒரு பொய்க் குற்றச்சாட்டைக் கூறி னார். இந்த அவதூறைக் கண்டித்தும், சபாநாயகரின் ஒருதலைப்பட்ச போக்கைக் கண்டித்தும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட &lsquo;இந்தியா&rsquo; கூட்டணியின் 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் பிப்ரவரி 10- அன்று தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சரின் மிரட்டல் இதுகுறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜு &nbsp;கூறுகையில், &ldquo;மார்ச் 9-இல் தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 8 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறும். இதில் மிக முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்படும். எதிர்க் கட்சிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டால் &lsquo;கில்லட்டின்&rsquo; (Guillotine) முறையைப் பயன்படுத்தி விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படும்&rdquo; என மிரட்டும் தொனியில் எச்சரித்தார். தேர்தல் கால பட்ஜெட்? தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் &nbsp;உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், பட்ஜெட்டின் முதல் அமர்வில் பெரிய அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. தற்போது இரண்டா வது அமர்வில் புதிய மசோதாக்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் மூலம் ஒரு &lsquo;தேர்தல் அறிக்கை&rsquo; போன்ற பட்ஜெட்டை மோடி அரசு &nbsp;வெளியிடத் திட்டமிட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சபாநாயகர் மீதான தீர்மானம் மற்றும் தேர்தல் அரசியல் நகர்வுகளால் நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு பெரும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.