முந்தய பக்கம்

போர் வேண்டாம்; அமைதி வேண்டும்!

15 Mar 2026, 4:11 pm
போர் வேண்டாம்; அமைதி வேண்டும்!
<p><strong>போர் வேண்டாம்; அமைதி வேண்டும்!</strong></p> <p>ஈரோடு, மார்ச் 15- &ldquo;போர் வேண்டாம் அமைதி வேண்டும்&rdquo; என்ற தலைப்பில் பெருந் துறையில் மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. ஏகாதிபத்திய அமெரிக்காவும், இனவெறி இஸ்ரேலும் இணைந்து நடத்தும் போரால் ஈரானிலும், பாலஸ் தீனத்திலும் ஏராளமான அப்பாவி &nbsp;மக்கள் படுகொலை செய்யப்பட்டுள் ளனர். பலர் நிரந்தர ஊனத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், &lsquo;போர் வேண்டாம்; அமைதி வேண் டும்&rsquo; என்ற தலைப்பில் இந்திய மாண வர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சனியன்று மாலை மனித சங்கிலி இயக்கம் நடை பெற்றது. ஈரோடு மாவட்டம், பெருந் துறை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த இயக்கத் திற்கு, வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் பி.அன்பு ஜனாதிபதி தலைமை வகித்தார். இதில் மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் த. நவீன், தலைவர் தசரதன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஏ. விஸ்வநாதன், விவசாயிகள் சங்க தலைவர் ஆர்.அர்ஜுனன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் ஈரான் மீது அநியாய தாக்குதல் &nbsp;நடத்தும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடு களை கண்டித்து, மார்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஞாயிறன்று சேலம் &nbsp;புதிய பேருந்து நிலையம் அருகே &nbsp;ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈடு பட்டனர். கட்சியின் மாவட்டச் செய லாளர் ஏ.ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். பிரவீன்குமார், தாலுகா செயலாளர் கள் சுந்தரம், சேகர், மேற்கு மாந கரச் செயலாளர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram