தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

என்.எல்.சி பங்கு விற்பனையை கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!

4 hours before
என்.எல்.சி பங்கு விற்பனையை கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்!
<p>என்.எல்.சி நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் ஒன்றிய அரசின் முடிவை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.</p><p>ஒன்றிய பாஜக அரசு நாட்டில் இயங்கும் நெடுஞ்சாலைகள், ரயில்வே நிலையங்கள், விமான நிலையங்கள், வங்கி, இன்சூரன்ஸ் என லாபம் ஈட்டிவரும் நவரத்தின பொதுத்துறை நிறுவனங்களை தேசிய பணமயமாக்கல் திட்டம் என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்த்து வருவதன் தொடர்ச்சியாகவே தற்போது என்.எல்.சி. நிறுவனத்தின் 3 சதவிகித பங்குகளை ஒன்றிய அரசு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதனை கண்டித்தும், ஒன்றிய அரசின் இந்த முடிவை உடனடியாக ரத்து செய்யக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்–லெனினிஸ்ட்) ஆகிய இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நெய்வேலி 8 ரோட்டில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. </p><p>ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் தலைமை தாங்கினார். சிபிஎம் நெய்வேலி நகர செயலாளர் ஆர். பாலமுருகன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஐ(எம்.எல்) விடுதலை கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பாலசுந்தரம், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, சிபிஐ மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் எம். ராதாகிருஷ்ணன், டி.மாணிக்கவாசகம், மாவட்டச் செயலாளர் பி.துரை, சிபிஐ(எம்.எல்) விடுதலை மாநிலக் குழு உறுப்பினர்கள் கோதனவேல், டி.கலியமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இடதுசாரி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.