என்எல்சி பங்கு விற்பனையை திரும்பப் பெற வேண்டும்; இல்லையெனில் தமிழக அரசே வாங்க வேண்டும்!
8 Jul 2026, 9:18 pm

என்எல்சி பங்கு விற்பனையை திரும்பப் பெற வேண்டும்; இல்லையெனில் தமிழக அரசே வாங்க வேண்டும்!

நெய்வேலியில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் முழக்கம்!

நெய்வேலி, ஜூலை 8 - என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் ஒன்றிய பாஜக அரசின் நட வடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும்; இல்லையெனில் 2013-ல் ஜெயலலிதா எடுத்த துணிச்சலான நடவடிக்கையைப் பின்பற்றி, அந்தப் பங்குகளைத் தமிழக அரசே வாங்கிப் பொதுத்துறையாகப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று இடதுசாரித் தலைவர்கள் முதலமைச்சரை வலி யுறுத்தியுள்ளனர்.

என்எல்சி நிறுவனத்தின் 3 சத வீத பங்கு விற்பனையைக் கண்டித்துச் செவ்வாயன்று நெய்வேலியில் நடை பெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத் தில் தலைவர்கள் பேசினர்.

‘வந்தே பாரத்’ வேகத்தில் பங்கு விற்பனை சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேசுகையில், “காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை, தற்போது பாஜக ஆட்சியில் ‘வந்தே பாரத்’ ரயில் வேகத்தில் மிகத்தீவிர மாக நடைபெறுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் என்எல்சியின் 3 சதவீத பங்குகள் எந்தவித வெளிப் படைத்தன்மையும் இன்றி ரூ.1,257 கோடிக்கு விற்கப்பட்டுள்ளன. இத னால் அரசின் கட்டுப்பாடு 69 சதவீத மாகக் குறைந்துள்ளது.

இப்படியே படிப் படியாகப் பங்குகள் விற்கப்பட்டால், ஒட்டுமொத்த நிறுவனமும் கார்ப்ப ரேட்டுகள் வசம் சென்றுவிடும்.

ஒன்றிய அரசு உடனடியாக இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், தமிழக முதல்வர் தலையிட்டு இப்பங்குகளைத் தமிழக அரசே வாங்கிப் பொதுத்துறை நிறு வனமாகத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். மேலும், என்எல்சி-யில் காலியாக உள்ள 10,000-க்கும் மேற்பட்ட நிரந்தரப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்; கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்ட மக்கள் பயன்பெறும் வகை யில் ஒரு பல்நோக்கு சிறப்பு மருத்துவ மனையை அமைக்க வேண்டும்.

கடலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீர் மற்றும் விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் பரங்கிப்பேட்டை ஹைட் ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும், ஏழை மக்களின் வாழ்வா தாரத்தைப் பாதிக்கும் ரேஷன் அரிசி குறைப்பைத் திரும்பப் பெற வேண் டும்” என அடுக்கடுக்கான கோரிக்கை களை முன்வைத்தார். தேசத்தின் ஆன்மாவை விற்காதீர்! சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீர பாண்டியன் பேசுகையில், “தோழர் பி.ராமமூர்த்தியின் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாலும் நேரு வின் ஆதரவாலுமே என்எல்சி உரு வானது. ‘

நவீன இந்தியாவின் கோ வில்கள்’ என்று வர்ணிக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை நிர்வ கிக்கத் திறமையற்ற அரசு, அதைத் தனியாருக்கு விற்காமல் தொழிலாளர் களிடமே ஒப்படைக்க வேண்டும். என்எல்சி என்பது தேசத்தின் ஆன்மா, அதை விற்க யாருக்கும் உரிமை இல்லை. நாட்டின் சொத்துக்கள் நாட் டிடமே இருக்க வேண்டும் என்பதே கம்யூனிச சிந்தனை” என்றார்.

துரோகம் இழைக்கும் மோடி அரசு சிபிஐ (எம்-எல்) விடுதலை மத்தி யக் குழு உறுப்பினர் பாலசுந்தரம் பேசுகையில், “1956-ஆம் ஆண்டு வெறும் ரூ.69 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டு, இன்று ₹69 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிறுவனமாக என்எல்சி வளர்ந்ததற்கு நிலம் கொடுத்த விவசாயிகளும் தொழிலா ளர்களுமே காரணம்.

அவர்களின் நம்பிக்கையை மோடி அரசு முற்றி லும் சிதைத்துவிட்டது” என்றார். சிஐடியு மாநிலப் பொதுச்செய லாளர் எஸ்.கண்ணன் பேசுகையில், “மோடி ஆட்சியில் ₹4.5 லட்சம் கோடி பொதுச்சொத்துக்கள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளன.

கார்ப்பரேட்டு களின் ₹16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், விவசாயிகளுக்கும் தொழிலாளர் களுக்கும் எவ்விதச் சலுகையும் வழங்கப்படவில்லை.

தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான என்எல்சி-யைப் பாதுகாக்க அரசியல் வேறுபாடு களைக் கடந்து உழைக்கும் மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு வலிமையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.