என்.எல்.சி. பங்குகளை விற்பதை ஏற்க முடியாது! கும்பகோணத்தில் வீரபாண்டியன் பேட்டி!
28 Jun 2026, 10:01 pm
<p><strong>என்.எல்.சி. பங்குகளை விற்பதை ஏற்க முடியாது! கும்பகோணத்தில் வீரபாண்டியன் பேட்டி! </strong></p><p>கும்பகோணம், ஜூன் 28 - என்.எல்.சி.யின் 3 சதவீத பங்குகளைத் தனியாருக்கு விற்பதைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமை யாக ரத்து செய்ய வேண்டும். மேகதாது அணை முயற் சியை இடதுசாரிகள் கடுமையாக எதிர்ப்போம். இக்கோ ரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 6 முதல் 15 வரை நடை பயண இயக்கம் நடைபெறும். கும்பகோணத்தைத் தலை மையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தையும், புதிய ரயில் பாதை திட்டத்தையும் அரசு அறிவிக்க வேண்டும். தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதமே ஆவதால், 60 ஆண்டு கால ஆட்சியாளர்களுடன் ஒப்பிடக் கூடாது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீதான சோதனையை அவர் சட்டப் படி நீதிமன்றத்தில் சந்திப்பார்” என்றார். மேலும், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாகத் தமிழகத்தைச் சாராதவர் நியமிக்கப்பட்டதில் கட்சிக்கு நெருடல் உள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.</p>
