நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காத என்எல்சி
17 Dec 2025, 4:11 pm
<p><strong>நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காத என்எல்சி</strong></p>
<p>கடலூர், டிச. 17 - நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, நெய்வேலி என்எல்சி தலைமை அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் புதனன்று முற்றுகையிட்டனர். முக்கியக் கோரிக்கைகள் என்எல்சி விரிவாக்கத்திற்காக நிலம் மற்றும் வீடுகளைக் கொடுத்தவர்களுக்கு 12 ஆண்டு களாகியும் இன்னும் ஒருவருக்குக் கூட நிரந்தர வேலை வழங்கப்படவில்லை. ஆழ்துளைக் கிணறு களுக்கு அமைச்சர் மற்றும் சுரங்க இயக்குநர் உத்தரவிட்டும் இழப்பீடு வழங்காமல் நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, வேலைவாய்ப்பு மற்றும் நிலத்திற் கான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும்; ஊராதனூர், கத்தாழை, மேல் வளையமாதேவி, மும்முடிச்சோழகன், கீழ் வளையமாதேவி, முத்து கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட கிராமங் களில் மருத்துவமனை, சமுதாய நலக்கூடம் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன. அதிகாரிகளின் அவமரியாதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக் குமார் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்குச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் எம். சின்னதுரை, விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன் உள்ளிட்ட 10 பிரதிநிதிகளை என்எல்சி அதிகாரிகள் இருக்கை யில் அமரச் சொல்லாமல் அவமதித்தனர். இதனால் கொதிப்படைந்த தலைவர்கள் முற்றுகையைப் தொடரப் போவதாக அறிவிக்கவே, பணிந்த அதி காரிகள் மீண்டும் அழைத்து மரியாதையுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். முத்தரப்புக் கூட்டத்திற்கு உடன்பாடு பேச்சுவார்த்தையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் முத்தரப்புக் கூட்டம் நடத்திப் பிரச்ச னைகளைத் தீர்க்க வேண்டும் என எம். சின்ன துரை எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். அதற்கு ஏற் பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். பங்கேற்றோர் முன்னதாக நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஆர். ரவிச் சந்திரன், விதொச மாவட்டத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு தலைமை தாங்கினர். மாவட்டச் செயலாளர்கள் ஆர்.கே. சரவணன் (விவசாயிகள் சங்கம்), எஸ். பிர காஷ் (விதொச) மற்றும்நிர்வாகிகள் ஆர். ராமச்சந்திரன், ஜே. ராஜேஷ் கண்ணன், பி. கர்ப்பிணி செல்வம், டி. கிருஷ்ணன், பி. வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாதிக்கப்பட்ட கிராமங்களின் சார்பில் த. சண்முகம், ஆர். ரவிச்சந்திரன், ஏ. சன்னியாசி, சூ. ராமச்சந்திரன், செல்லதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதி யில் பெரும் பரபரப்பு நிலவியது.</p>
