தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளை கண்டித்துச் சாலை மறியல் வடலூர் அருகே பரபரப்பு!

24 May 2026, 2:26 am
நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளை கண்டித்துச் சாலை மறியல் வடலூர் அருகே பரபரப்பு!
<p><strong>நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளை கண்டித்துச் சாலை மறியல் வடலூர் அருகே பரபரப்பு!</strong></p><p>கடலூர், மே 23- கடலூர் மாவட்டம் வடலூர் அருகே நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் 1-ஆவது சுரங்க விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு மாத காலமாக மக்க ளவைத் தேர்தல் காரணமாக, விவசாயி களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை அன்று திடீரெனத் தென்குத்து கிராமத்திற்கு வந்த என்.எல்.சி அதிகாரிகள், நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சுரங்க விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது எனக் கோரியும் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் தென்குத்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல் துறை அதி காரிகள், சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போலீஸார் பொதுமக்களைக் கைது செய்யும் முயற்சியில் இறங்கினர். அப்போது போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால், இருதரப்பிற்கும் இடையே பலத்த தள்ளுமுள்ளு ஏற்பட்டுப் பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோரைப் போலீஸார் கைது செய்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.