தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

என்எல்சி நிலம் கொடுத்த பிரச்சனை முத்தரப்புக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தல்

30 Oct 2026, 11:51 pm
என்எல்சி நிலம் கொடுத்த பிரச்சனை முத்தரப்புக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தல்

என்எல்சி நிலம் கொடுத்த பிரச்சனை முத்தரப்புக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தல்

கடலூர், அக்.30-கடலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யசெந்தில்குமார் தலைமையில் நடை பெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க முன்னாள் மாநிலத் துணைச் செயலாளர் கோ. மாதவன் மேலும் பேசியதாவது: கடந்த ஜூலை 3-ஆம் தேதி நடைபெற்ற முத்தரப்புக் கூட்டத்தில் பேசப்பட்ட ஆழ்துளைக் கிணறு

கள், விவசாயக் கூலித் தொழிலாளர்க ளுக்கான நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கை கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

வி. சாத்தப்பாடியில் விவசாயிகள் பயன் படுத்தும் வழியில் பாலம் அமைக்கவும், செங்கால் ஓடையைச் சீர மைக்கவும், மாவட்டம் முழுவதும் மழைநீர் வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்களைத் தூர்வார வும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையில் நனைந்து முளைத்துள்ள நெல் மூட்டைகளைப் பாதுகாப்பான கிட்டங்கிகளுக்கு அனுப்ப வேண்டும்.

என்எல்சிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நிவாரணம், மாற்று இடம், வீடு, நிரந்தர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக முத்தரப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

கரும்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.705 வழங்க வேண்டும். நிலுவையிலுள்ள பயிர்க் காப்பீட்டுத் தொகையை விடுவிக்க வேண்டும். மேலும், நிலம் கையகப் படுத்துவதில் முறைகேடு புகார்கள் மற்றும் நில எடுப்புப் பிரிவு அலுவலர் சண்முகவள்ளி மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கூட்டத்தில் பல்வேறு விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.