லாபம் கொட்டும் ‘நவரத்னா’வைக் கூறு போடலாமா? - பாலன்
37 minutes before

லாபம் கொட்டும் ‘நவரத்னா’வைக் கூறு போடலாமா? - பாலன்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி இந்தியா) நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமோ, அரசின்

வரிப்பணத்தைச் சார்ந்து நிற்கும் நிறுவனமோ அல்ல; தொடர்ந்து சாதனை லாபம் ஈட்டி வரும் ‘நவரத்னா’பொதுத்துறை நிறுவனம். அதில் ஒன்றிய அரசின் பங்கை 93.56 சதவீதத்திலிருந்து 69.47 சதவீதமாகக் குறைத்தது போதாதென்று, இப்போதுபுதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துணை நிறுவனத்தின் வழியாகவும் பங்குச்சந்தையில் விற்கத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டு மக்களின் தியாகத்தில்உருவான இந்நிறுவனத்தைத் துண்டு துண்டாகப் பிரித்துத் தனியாருக்குத் தாரை வார்க்கும் இந்தச் சூழ்ச்சியை ஒன்றிய அரசுஉடனடியாகக் கைவிட வேண்டும்.

இடதுசாரிகளின் முன்னெடுப்பில் பிறந்த நிறுவனம்

நெய்வேலிப் பகுதியில் பூமிக்கடியில் பழுப்பு நிலக்கரிப் படிமங்கள் இருப்பது 1930களிலேயே கண்டறியப்பட்டது. அதைத் தொழில் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற அரசியல் முன்னெடுப்புகள் 1950களில்தான் தீவிரமடைந்தன. சென்னை மாநிலச் சட்டமன்றத்தின் முதல் எதிர்க்கட்சித் தலைவர் பி. ராமமூர்த்தியும், மக்களவையில் கே. அனந்த நம்பியாரும் இதைத் தொடர்ந்து வலியுறுத்தினர். ஜெர்மனியில் நடந்த உலகத் தொழிற்சங்க மாநாட்டுக்குச் சென்ற பி. ராமமூர்த்தி, அங்கு பழுப்பு நிலக்கரியைக் கொண்டு பெரும் தொழிற்சாலைகள் இயங்குவதை நேரில் கண்டார். அந்த அனுபவமே நெய்வேலியில் பொதுத்துறை நிறுவனம் தொடங்கும் யோசனைக்கு வலுவான அடிப்படையானது.

இடதுசாரித் தலைவர்களின் தொடர் அழுத்தம், அப்பகுதி மக்களின் நிலத் தியாகம், ஜெர்மனி, சோவியத் ஒன்றியத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றின் விளை வாக, 1956 நவம்பர் 14 அன்று நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகம் உருவானது. 2016 மார்ச்சில் ‘என்எல்சி இந்தியா லிமிடெட்’ எனப் பெயர் மாறிய அது, இன்று நவரத்னா அந்தஸ்து பெற்ற முன்னணிப்பொதுத்துறை நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.

மூன்று பிரிவுகள், ஒரு சூழ்ச்சி

என்எல்சி இந்தியா இன்று மூன்று எரிசக்திப் பிரிவுகளில் செயல்படுகிறது. முதலாவது, நிலக்கரி, பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்களைச் சார்ந்த 6,620 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள். இரண்டாவது, சூரிய ஒளி, காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பிரிவு; இதில் 1,430 மெகாவாட் முதல் 7,200 மெகாவாட் வரையிலான தற்போதைய, எதிர்காலத் திட்டங்கள் அடங்கும். மூன்றாவது, 4 மெகாவாட் பசுமை ஹைட்ரஜன் திட்டம், பேட்டரி எரிசக்திச் சேமிப்பு, நிலக்கரி வாயு ஆக்கல் உள்ளிட்ட பசுமை எரிசக்திப் பிரிவு.இங்கேதான் சூழ்ச்சி ஒளிந்துள்ளது. சுரங்கம் தோண்டுவது, நிலம் கையகப்படுத்துவது, சுற்றுச்சூழல் சவால்களைச் சந்திப்பது போன்ற கடினமான அனல் மின் பிரிவை மட்டும் தாய் நிறுவனத்தில் வைத்துக்கொண்டு, எதிர்காலத்தில் பெரும் லாபம் கொட்டப்போகும் புதுப்பிக்கத்தக்க, பசுமை எரிசக்திப் பிரிவுகளைத் தனியாகப் பிரித்துப் பங்குச்சந்தை வழியாகத் தனியா ருக்குத் தாரை வார்க்கிறார்கள். இதற்காகவே என்எல்சி இந்தியா ரினியூவபிள்ஸ் லிமிடெட் (என்ஐஆர்எல்), என்எல்சி இந்தியா கிரீன் எனர்ஜி லிமிடெட் (நைஜெல்) ஆகிய துணை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

லாபத்தில் இயங்கும் நிறுவனத்தை விற்பதா?

நிறுவனத்தின் 2025–26 ஆண்டு அறிக்கையின்படி, அதன் தனி நிகர லாபம் ₹2,525 கோடி;துணைநிறுவனங்களையும் சேர்த்த ஒருங்கிணைந்த நிகர லாபம் ₹3,769.46 கோடி. நடப்பு 2026–27 நிதி யாண்டின் முதல்ஆறு மாதங்களில் மட்டும் ₹1,764 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இவ்வளவு லாபம் ஈட்டும் ஒரு பொதுத்துறைநிறுவனத்தின் பங்குகளைத் தொடர்ந்து விற்பது அப்பட்டமான மக்கள் விரோதப் போக்கு.

2013: 13 நாள் வேலைநிறுத்தம்

2013-இல் என்எல்சியின் 5 சதவீதப் பங்குகளைத் தனியாருக்கு விற்க ஒன்றிய அரசுமுடிவெடுத்தபோது, அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து ஜூலை 3 இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கின. நிரந்தர, ஒப்பந்தத் தொழிலாளர்கள் சுமார் 27,000பேர் பங்கேற்ற அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டுப் போராட்டம், ஜூலை 15 வரை தொடர்ந்து 13 நாட்கள்நீடித்தது.அந்தப் போராட்டத்தின் அழுத்தத்தால், அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா தலையிட்டார். டிட்கோ, சிப்காட், டிஐஐசி, டுஃபிட்கோ,பவர்ஃபின் ஆகிய ஐந்து மாநிலப் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் 3.56 சதவீதப் பங்குகளை (5.97 கோடிப் பங்குகள்) வாங்குவதற்கான செபி ஒப்புதலை ஜூலை 15 அன்றுபெற்றார். அன்று மாலையே வேலைநிறுத்தம் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் மாதம் ₹360 கோடிக்குஅப்பங்குகள் முறைப்படி வாங்கப்பட்டு, நிறுவனத்தின் பொதுத்துறைத் தன்மை பாதுகாக்கப்பட்டது.

படிப்படியாகக் கரைக்கப்பட்ட அரசின் பங்கு

1956-இல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் 2013 வரை ஒன்றிய அரசின் பங்கு93.56 சதவீதமாக இருந்தது. 2013 ஆகஸ்டில் விற்கப்பட்ட 3.56 சதவீதம் தமிழ்நாடு அரசு நிறுவனங்களிடம் சென்றது.அதன்பின் 2014–2020 காலத்தில் 10.80 சதவீதமும், 2024 மார்ச்சில் 7 சதவீதமும், 2026 ஜூனில் ‘ஆஃபர் ஃபார் சேல்’ (விற்ப னைக்கான அளிப்பு) மூலம் 2.73 சதவீதமும் விற்கப்பட்டன. இதனால்ஒன்றிய அரசின் பங்கு 69.47 சதவீதமாகக் குறைந்துவிட்டது. தமிழ்நாடு அரசு நிறுவனங்களின் பங்கு தவிர,மீதமுள்ள பங்குகள் தனியார், கார்ப்பரேட் முதலீட்டாளர்கள் வசம் சென்றுவிட்டன.இதற்கிடையே, நிறுவனத்தின் சேமிப்பில்இருந்த உபரி நிதியையும் பங்கு திரும்பப் பெறுதல் (2017-இல் ₹1,476 கோடி, 2018-இல் ₹1,249 கோடி) மூலமும் ஈவுத்தொகை மூலமும் ஒன்றிய அரசு எடுத்துக்கொண்டது.

2026: மீண்டும் எதிர்ப்பு

2026 ஜூனில் ஒன்றிய அரசு மீண்டும்3 சதவீதப் பங்குகளை விற்க முடிவெடுத்த போதே, ஜூன் 25 அன்று முதலமைச்சர் ஜோசப் விஜய், பிரதமருக்குக்கடிதம் எழுதி மாநிலத்தின் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார். அதே நாளில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் நிலக்கரித் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதினார்.ஜூலை 7 அன்று நெய்வேலி எட்டு ரோட்டில், சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்எல்) லிபரேஷன் ஆகிய இடதுசாரிக்கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், மாநிலச் செயலாளர்கள் பெ. சண்முகம், மு. வீரபாண்டி யன், மத்தியக் குழு உறுப்பினர் பாலசுந்தரம் ஆகியோர் தலைமையில்,பங்கு விற்பனை யைத் திரும்பப் பெறக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இப்போது ஐபிஓ வழியே...

தொடக்கத்தில் புதுப்பிக்கத்தக்க, பசுமை எரிசக்தித் திட்டங்களை ‘இன்விட்’ எனப்படும் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை மூலம் தனியாரிடம் ஒப்படைக்க முயன்ற னர். இப்போது அதைக் கைவிட்டு, துணை

நிறுவனமான என்ஐஆர்எல்-ஐப் பங்குச் சந்தையில் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம் விற்கின்றனர்.“சொத்துகளைப் பணமாக்குதல்”, “மதிப்பைத் திறத்தல்” என்று நிர்வாகம் இதற்குப் பெயர் சூட்டுகிறது; உண்மையில் இது மக்கள் சொத்தைப் படிப்படயாகத் தனியாருக்கு மாற்றும் வழிமுறையே. நவம்பர் 18 அன்று செபியிடம் தாக்கல் செய்யப்பட்ட வரைவு அறிக்கையின்படி, என்ஐஆர்எல் ₹3,300 கோடிக்குப் புதிய பங்குகளை வெளியிடுவதுடன், தாய் நிறுவனம் தன்வச முள்ள 10 கோடிப் பங்குகளையும் பொதுமக்க ளுக்கும் தனியாருக்கும்விற்கிறது. தாய் நிறுவனத்தின் ₹3,869.26 கோடி நிகர மதிப்புள்ள சூரிய, காற்றாலைச் சொத்து களும் பசுமை ஹைட்ரஜன் திட்டங்களும் இதற்குள் அடங்கும்.

நமது கோரிக்கை

2013-இல் தொழிற்சங்கங்களின் 13 நாள் கூட்டுப் போராட்டத்தைத் தொடர்ந்து அன்றைய தமிழ்நாடு அரசு மாநிலப் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் பங்குகளை வாங்கியதுபோல, இன்றைய தமிழ்நாடு அரசும் உடனடியாகத் தலையிட வேண்டும். லாபத்தில் இயங்கும் என்எல்சி இந்தியா, அதன் துணை நிறுவனங்களான என்ஐஆர்எல், நைஜெல் ஆகியவற்றின் பங்குகளைப் பங்குச்சந்தை மூலமாகவோ வேறு எந்த வடிவிலோ தனியாருக்கு விற்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்!