வியர்வையும் தியாகமும் விலைபோகிறதா? என்எல்சி நிறுவனத்திற்கு வந்த சோதனை! - ஆர். பாலமுருகன்
2 Jul 2026, 10:09 pm

வியர்வையும் தியாகமும் விலைபோகிறதா? என்எல்சி நிறுவனத்திற்கு வந்த சோதனை! - ஆர். பாலமுருகன்

இந்திய நாட்டின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் நவரத்தின பொதுத்துறை நிறுவன மான என்.எல்.சி இந்தியா லிமிடெட் (என்எல்சிஐஎல்), 1956ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் நெய்வேலி யில் நிறுவப்பட்டு, இன்று பழுப்பு நிலக்கரி சுரங்கம் மற்றும் மின் உற்பத்தியில் உலகளா விய அங்கீகாரம் பெற்றுத் திகழ்கிறது. லட்சக் கணக்கான தொழிலாளர்களின் உழைப்பாலும், விளைநிலங்களைத் தியாகம் செய்த மக்களின் பங்களிப்பாலும் கட்டியெழுப்பப்பட்ட இந்த வரலாற்றுப் பொக்கிஷம் தனியார்மயமாவதைத் தடுத்து, 100% பொதுத்துறை நிறுவனமாகப் பாது காப்பதே தற்போதைய முக்கியத் தேவையாக உள்ளது. லாபகரமாக இயங்கும் இந்நிறு வனத்தின் பங்குகள் விற்கப்படுவதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்; ஏற்கெனவே விற்கப்பட்ட பங்குகளை என்எல்சிஐஎல் பொதுச் சந்தையிலிருந்து மீண்டும் திரும்பப் பெற (Buyback) நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிலமும் வீடும் கொடுத்தோரின் தியாக வரலாறு

நெய்வேலியைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக் கான குடும்பங்கள் தங்களின் நிலங்களையும் வீடுகளையும் தியாகம் செய்த வரலாற்றின் மீதே என்.எல்.சி நிமிர்ந்து நிற்கிறது. ஒன்றிய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக விபரத்தின்படி விவசாய நிலத்திற்கு ஏக்கருக்கு ₹25 லட்சமும், கிராமப்புற வீட்டு மனைகளுக்கு ₹40 லட்சமும், நகர்ப்புற வீட்டு மனைகளுக்கு ₹75 லட்சமும் குறைந்தபட்ச இழப்பீடாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கிராமப் பகுதி சந்தை மதிப்பு ₹60 முதல் ₹70 லட்சம் வரை இருக்கும் சூழலில், இந்தத் தொகை மிகவும் குறைவு. மேலும், 2023ஆம் ஆண்டு பரவானார் கால்வாய் பகுதியில் அறு வடைக்குத் தயாராக இருந்த பயிர்களை என்எல்சிஐஎல் கனரக வாகனங்களை இயக்கி அழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹40,000 பயிர் இழப்பீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், இந்நிறுவனம் நாட்டின் ‘நவரத்தின’ அந்தஸ்தைப் பெற தொழிலாளர்களின் கடுமை யான உழைப்பே காரணமாகும். சமூகப் பொறுப்பு டன் செயல்படும் இந்நிறுவனம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆண்டுதோறும் சுமார் 1,101 பயிற்சிப் பணியாளர்களைச் (Apprentices) சேர்த்து, அவர்களுக்குத் தகுதிக்கு ஏற்ப ₹10,000 முதல் ₹15,000 வரை மாத உதவித்தொகை வழங்கி வருகிறது. முழுக்க முழுக்க நிரந்தர, ஒப்பந்த மற்றும் அப்ரண்டீஸ் தொழிலாளர்களின் உழைப்பால் உருவான பொதுத்துறைச் சொத்தை பங்கு விலக்கல் என்ற பெயரில் தனியார்மய மாக்கத் துடிப்பது உழைப்பாளர் வர்க்கத்திற்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும். ஒன்றிய அரசின் கார்ப்பரேட் சார்புக் கொள்கை ஒன்றிய அரசின் கார்ப்பரேட் சார்புக் கொள்கை கள் நாட்டின் பொருளாதாரச் சீர்குலைவாக அமைந்துள்ளன: 1. பெரு நிறுவனங்கள் மீதான வரியை 30%-லிருந்து 22%-ஆகக் குறைத்ததால், நிறுவனங்களின் லாபம் 24% உயர்ந்தாலும் அரசின் வரி வருவாயில் ஆண்டுக்குச் சராசரியாக ₹1.84 லட்சம் கோடி வரை பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

2. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் வங்கிகளில் பெரு நிறுவனங்கள் வாங்கிய சுமார் ₹14.5 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்கள் ‘வராக்கடன் தள்ளுபடி’ என வாரி இறைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுத்துறை வங்கிகளின் நிதி இழப்பு அதிகரித்து, சாமானிய மக்களின் வைப்பு நிதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

3. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ₹1.97 லட்சம் கோடி நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும் பி.எல்.ஐ (PLI) போன்ற சலுகைகள், நடைமுறையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை நசுக்கி, வெறும் 1% அசுர வளர்ச்சி பெற்ற பெரிய கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே பயனளிக்கிறது.

என்எல்சியின் நிதிப் பலமும் பங்குகளை திரும்பப் பெறும் சாத்தியமும்

என்எல்சி ₹44,000 கோடிக்கும் அதிகமான சந்தை மதிப்பு கொண்ட மிக லாபகரமான நிறு வனமாகும். தற்போதைய 2025-26 நிதி யாண்டில் தனது நிகர லாபத்தில் 39% வளர்ச்சி யை எட்டி, ₹3,769 கோடி நிகர லாபம் ஈட்டி சாத னை படைத்துள்ளதுடன், ஒட்டுமொத்த வருவா யாக ₹17,490 கோடியைக் குவித்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் மட்டும் லாபம் 189% ஆக அதிகரித்து, ₹1,393.46 கோடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இவ்வளவு பிரம்மாண்ட உபரி லாபத்தை அரசு கஜானாவிற்கு வாரி வழங்கும் போது, நிதி நெருக்கடி என்று கூறுவது தொழிலாளர்களை ஏமாற்றும் ஏகாதிபத்திய கார்ப்பரேட் நாடகமே ஆகும். ஏற்கனவே விற்கப்பட்ட பங்குகளை மீட்கும் (Buyback) நடவடிக்கைக்கு என்எல்சி-க்கு வலுவான முன்மாதிரிகள் உள்ளன. கடந்த 2018ஆம் ஆண்டு என்.எல்.சி ஒரு பங்குக்கு ₹88 வீதம், மொத்தம் ₹1,248.99 கோடி மதிப்பில் 14.19 கோடி பங்குகளைப் பொதுச்சந்தையில் இருந்து வெற்றிகரமாகத் திரும்பப் பெற்றது. இதேபோல ஓஎன்ஜிசி (ONGC) நிறுவனம் ஒரு பங்குக்கு ₹159 வீதம், மொத்தம் ₹4,022 கோடி மதிப்பில் சுமார் 25.29 கோடி பங்குகளைத் திரும்பப் பெற்றுப் பொதுத்துறைத் தன்மையைத் தக்கவைத்துக் கொண்டது. கோல் இந்தியா மற்றும் என்.எச்.பி.சி (NHPC) ஆகிய நிறு வனங்களும் இத்தகைய பங்கு மீட்புத் திட்டங் களைச் செயல்படுத்தியுள்ளன.

மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு

லாபகரமான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைப் பங்குச்சந்தைக்குக் கொண்டு சென்று தனியார்மயமாக்கக் கூடாது என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் வெறும் லாப நோக்கத்திற்காக மட்டுமின்றி, சமூகப் பாது காப்பு, வேலைவாய்ப்பு மற்றும் நாட்டின் பொரு ளாதார இறையாண்மையை நிலைநிறுத்த வும் உதவுகின்றன. அரசாங்கம் தாராளமய மாக்கலைக் கைவிட்டு, இவற்றை பொதுத்துறை யிலேயே தக்கவைத்து மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று மத்தியக் குழு வலியுறுத்துகிறது. என்எல்சி முழுமையான பொதுத்துறை நிறுவனமாக நீடிப்பதால்தான், மின்சாரத்தை ஒரு யூனிட் சராசரியாக ₹3.06 முதல் ₹4.00 வரை என்ற குறைந்த விலைக்கு வழங்க முடிகிறது. மாறாக, இதே மின்சாரத்தை அதானி போன்ற தனியார் நிறுவனங்களிடமிருந்தும், ரிலையன்ஸ் உள்ளிட்ட பிற தனியார் மின் சந்தைகளிலிருந்தும் வாங்கும் போது, ஒரு யூனிட் சராசரியாக ₹5.91 முதல் ₹12.00 வரை, தட்டுப்பாட்டு காலத்தில் ₹14/-க்கும் மேல் மிக அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டா யம் அரசுக்கு ஏற்படுகிறது. குறைந்த கட்டணத்தில் தடையற்ற மின்சாரம் வழங்கி ஏழை எளிய மக்களைப் பாதுகாக்க என்எல்சிஐஎல் போன்ற நிறுவனங்களை 100% பொதுத்துறையாகவே நீடிக்கச் செய்வது காலத்தின் கட்டாயமாகும்.