என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தக் கோரி வாகனப் பேரணி
28 Oct 2026, 1:15 am

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தக் கோரி வாகனப் பேரணி

கடலூர், செப். 27-என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணி யாற்றும் சொசைட்டி மற்றும் ஒப்பந்தத் தொழி

லாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி, என்எல்சி ஒப்பந்தத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் 2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருசக்கர வாகனப் பேரணியில் ஈடு பட்டனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் நிலக்கரிச் சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 10,000-க்கும் மேற்பட்ட சொசைட்டி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கான பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், என்எல்சி ஒப்பந்தத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தை அறிவிப்பதற்காக இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணா திடலில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருசக்கர வாகனங்களில் பேரணியாகப் புறப்பட்டு, என்எல்சி தலைமை அலுவலகத்தை நோக்கிச் சென்றனர்.

இந்தப் பேரணி நேரு சிலை அருகே சென்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பேரணியைத் தடுத்து நிறுத்தினர். அப்போது தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

என்எல்சி நிறுவனத்தில் சொசைட்டி மூலம் பணியாற்றும் அனைத்துத் தொழி லாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரையும் சொசைட்டியில் இணைக்க வேண்டும். கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் விடுபட்ட தொழிலாளர்களை சீனி யாரிட்டி பட்டியலில் சேர்க்க வேண்டும். தொழி லாளர்களுக்கான ஊதிய மாற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

இந்தப் பேரணியில் தொமுச, சிஐடியு, அதொமுச, பாதொச, தொவிமு, தொவாச, ஐஎன்டியுசி, பிஎம்எஸ், ஏஐடியுசி உள்ளிட்ட ஒப்பந்தத் தொழிற்சங்கக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் நிலம், வீடு வழங்கி பாதிக்கப்பட்டோர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.