மாநிலங்களவை உறுப்பினராக நிதிஷ் குமார் பதவியேற்பு!
10 Apr 2026, 2:20 pm

மாநிலங்களவை உறுப்பினராக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பதவியேற்றுக் கொண்டார்.

ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார், கடந்த மார்ச் 16-ஆம் தேதி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் கடந்த மார்ச் 30-ஆம் தேதி தனது எம்.எல்.சி பதிவியை ராஜினாமா செய்தார். ஆனால் முதலமைச்சர் பதவியை அவர் இன்னும் ராஜினாமா செய்யவில்லை. இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று பதவியேற்றுக் கொண்டார். குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பீகாரில் முதலமைச்சர் பதவியை இன்னும் ஓரிரு நாட்களில் நிதிஷ் குமார் ராஜினாமா செய்ய இருப்பதாக ஜேடியு மூத்த தலைவர் விஜயகுமார் சௌத்ரி கூறியுள்ளார்.