முந்தய பக்கம்

பீகார் அமைச்சராக நிதிஷ் மகன் பதவியேற்பு!

7 May 2026, 5:03 pm
பீகார் அமைச்சராக நிதிஷ் மகன் பதவியேற்பு!

பீகார் பாஜக அரசின் அமைச்சரவையில், நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார் உட்பட 32 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.

பீகார் முதல்வராக இருந்த நிதிஷ்குமார், மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற பிறகு தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 15-ம் தேதி பீகாரின் புதிய முதலமைச்சராக பாஜக-வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி பதவியேற்றார். அவருடன் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த விஜய் குமார் சவுத்ரி மற்றும் பிஜேந்திர பிரசாத் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.

இந்த நிலையில் மாநில அரசின் அமைச்சரவையில், இன்று நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார் உட்பட 32 பேர் பதவியேற்றுக் கொண்டனர். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி.நட்டா, முன்னாள் முதலமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான நிதிஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram