முந்தய பக்கம்

நிதிஷ் குமார் ராஜினாமா

30 Mar 2026, 3:40 pm
நிதிஷ் குமார் ராஜினாமா
<p><strong>நிதிஷ் குமார் ராஜினாமா</strong></p> <p>ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும், பீகார் முதலமைச்ச ருமான நிதிஷ் குமார் தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை திங்களன்று ராஜி னாமா செய்தார். நிதிஷ் குமாரின் ராஜி னாமா கடிதத்தை ஜேடியு கட்சி உறுப்பி னர் சஞ்சய் காந்தி மேலவைத் தலைவ ரிடம் சமர்ப்பித்தார். இதனை மேலவைத் தலைவர் அவதேஷ் நாராயண் சிங் உறுதிப்படுத்தியுள்ளார். &nbsp;மார்ச் 16 அன்று நடைபெற்ற தேர்த லில் நிதிஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து ஏப்ரல் 10ஆம் தேதி மாநி லங்களவை உறுப்பினராகப் பதவி யேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெ டுக்கப்பட்ட 14 நாட்களுக்குள் மாநில சட்டப்பேரவை அல்லது மேலவை உறுப்பினர் பதவியையும், முதலமை ச்சர் பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது விதியாகும். இத்த கைய சூழலில், நிதிஷ் குமார் சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ராஜி னாமா செய்த நிலையில், இன்னும் முத லமைச்சர் பதவி மட்டுமே ராஜினாமா செய்ய வேண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram