முந்தய பக்கம்

நிதீஷ் குமார் சகாப்தம் முடிந்தது; பாஜகவின் முதல் பீகார் முதலமைச்சர் நாளை பதவியேற்பு!

14 Apr 2026, 5:03 pm
நிதீஷ் குமார் சகாப்தம் முடிந்தது; பாஜகவின் முதல் பீகார் முதலமைச்சர் நாளை பதவியேற்பு!

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், பாஜகவின் முதல் பீகார் முதலமைச்சராக சாம்ராட் சவுத்ரி நாளை பதவியேற்க இருக்கிறார்.

பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ஆவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ் குமார், கடந்த மாதம் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாகவும், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதாகவும் அறிவித்தார். இதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். இதை தொடர்ந்து அவர் தனது முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். இதன் மூலம் 21 ஆண்டுகளாக முதலமைச்சராக பதவி வகித்த நிதீஷ் குமாரின் சகாப்தம் முடிவுக்கு வந்தது.

மேலும், பீகாரின் புதிய முதலமைச்சராக பாஜக-வை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி நாளை பதவியேற்க இருக்கிறார்.

Share
FacebookXWhatsAppTelegram