தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

10 குழந்தைகளில் 4 பேர் மேல்நிலைக் கல்வியை முடிப்பதில்லை நிதி ஆயோக் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

10 May 2026, 9:01 pm
10 குழந்தைகளில் 4 பேர் மேல்நிலைக் கல்வியை முடிப்பதில்லை நிதி ஆயோக் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

10 குழந்தைகளில் 4 பேர் மேல்நிலைக் கல்வியை முடிப்பதில்லை நிதி ஆயோக் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நாட்டின் பள்ளிக்கல்வி முறை குறித்து நிதி ஆயோக் மேற் கொண்ட 10 ஆண்டு கால ஆய்வில் (2014 முதல் 2024 வரை),”10 குழந்தைகளில் 4 பேர் மேல்நிலைக் கல்வி யை முடிப்பதில்லை” என்ற அதிர்ச்சி தக வல் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,”நாட்டில் பள்ளிக்குச் செல்லும் 10 குழந்தைகளில் 4 பேர் தங்கள் மேல்நிலைக்கல்வியை முழுமையாக முடிக்காமல் பாதியிலேயே வெளியேறுகின்றனர். இதற்கு காரணம் இந்தியக் கல்வி முறை ஒரு குறுகிய பிரமிடு போன்ற அமைப்பைக் கொண் டுள்ளது தான். 7.3 லட்சம் தொடக்கப் பள்ளிகள் இந்தியாவில் உள்ள சூழ லில், மேல்நிலைப் பள்ளிகளின் எண் ணிக்கை வெறும் 1.64 லட்சமாக உள்ளது.

குறிப்பாக இந்தியாவில் உள்ள பள்ளி களில் வெறும் 5.4% மட்டுமே 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தொடர்ச்சியான கல்வியை வழங்கு கின்றன. இதனால் பெரும்பாலான மாண வர்கள் தங்கள் கல்வியின் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்லும் போது பள்ளி களை மாற்ற வேண்டியுள்ளது. இதுவே மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே நிறுத்துவதற்கு ஒரு முக்கியக் காரணமாகிறது.

மிக முக்கியமாக நாடு முழுவதும் சுமார் 7,993 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை. இதில் மேற்கு வங்கம் (3,812 பள்ளிகள்) முதலிடத்தில் உள்ளது. தெலுங்கானா (2,245 பள்ளி கள்) 2ஆவது இடத்தில் உள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது. திஸ்பூர் அசாமில் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்க புதிய முயற்சி சிபிஎம் அறிவிப்பு அசாமில் மக்களுக்கான போராட் டங்களை முன்னெடுக்க புதிய முயற்சி மேற்கொள்ளப்போடும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறி வித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் அசாம் மாநிலச் செயலாளர் சுப்ரகாஷ் தாலுக்தர் செய்தியா ளர் சந்திப்பின் போது கூறுகையில் ,”அசாமில் மக்கள் அதிருப்தி இருந்தபோதி லும், பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இது நல்லதல்ல. ஆனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்கு வதில் தேவையற்ற தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவும் ஒரு முக்கியமான காரணம் தான். சரி யான நேரத்தில் கூட்டணியை உருவாக்கு வதில் முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸ் சுறுசுறுப்பாக இல்லை. அதேபோல் இந்த விஷயத்தில் ராய்ஜோர் தளம் கட்சியும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. இது வும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் தோல் விக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். எனி னும் தோல்வியைப் பேசி பயன் இல்லை. அசாமில் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுக்க புதிய முயற்சியை சிபிஎம் மேற்கொள்ளும்” என அவர் கூறினார்.

மோசமடையும் கற்றல் திறன்

மோடி பிரதமர் ஆன பின்பு நாட் டில் கற்றல் திறன் மோசம டைந்து வருகிறது. நிதி ஆயோக் ஆய்வில்,”நாட்டில் மாணவர் சேர்க்கை ஓரளவு அதிகரித்திருந்தா லும், அவர்களின் வாசிப்புத் திறன், கற்றல் விளைவுகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2014இல், 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 74.7% பேரில், 2ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தை வாசிக்க முடிந்தது. ஆனால் 2024இல் இந்த எண் ணிக்கை 71.1% ஆகக் குறைந்துள் ளது” என அதில் கூறப்பட்டுள்ளது. அதாவது 10 ஆண்டில் நாடு முழு வதும் 3.6% மாணவர்கள் சாதாரண கற்றல் திறனை இழந்துள்ளனர். ஆனால் மோடி அரசோ புதிய கல்விக் கொள்கை என்ற பூகம்பத்தை செயல் படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.