தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

1 லட்சம் பள்ளிகளில் மாணவிகளுக்குக் கழிப்பறை இல்லை; 61,000 பள்ளிகளில் பயன்படுத்த இயலாத கழிப்பறைகள்

20 May 2026, 9:08 pm
1 லட்சம் பள்ளிகளில் மாணவிகளுக்குக் கழிப்பறை இல்லை; 61,000 பள்ளிகளில் பயன்படுத்த இயலாத கழிப்பறைகள்

1 லட்சம் பள்ளிகளில் மாணவிகளுக்குக் கழிப்பறை இல்லை; 61,000 பள்ளிகளில் பயன்படுத்த இயலாத கழிப்பறைகள்

புதுதில்லி இந்தியாவில் 98,592 அரசுப் பள்ளிகளில் மாணவிக ளுக்கான கழிப்பறை கள் இல்லை எனவும் 61,540 பள்ளி களில் உள்ள கழிப்பறைகள் பயன்படுத்தக்கூடிய வகையில் எனவும் நிதி ஆயோக் அறிக்கை யில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் பள்ளிக் கல்வி முறை குறித்து நிதி ஆயோக் ஒரு புதிய அறிக்கை வெளியிட்டுள் ளது.

அவ்வறிக்கை அரசுப் பள்ளி களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்த தீவிரப் பிரச்சனைகளை நாட்டின் கல்வி முறையில் உள்ள பெரிய குறைபாடுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டி யுள்ளது.

இந்தியாவில் மொத்தம் 14.71 லட்சம் பள்ளிகள் உள்ளன.

அவற் றில் 24.69 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பள்ளிக ளில் மின்சார வசதி மேம்பட்டுள்ள தாக சொல்லப்படுகிறது. எனினும் அது இன்னும் சீரற்றதாகவே உள்ளது.

2024–25 ஆம் ஆண்டிற் கான கல்விக்கான ‘ஒருங்கி ணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு பிளஸ்’ தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள சுமார் 1.19 லட்சம் பள்ளிகளில் இன்னும் முறை யான மின் இணைப்பு வசதி இல்லை.

இது செயற்கை நுண்ண றிவு காலத்தில் மாணவர்க ளின் கற்றல் சூழலை மேம்படுத்து வதற்கு முட்டுக்கட்டையாக இருந்து அவர்களது கற்றல் சூழலை மேலும் கடினமாக்குகிறது.

கை கழுவும் வசதியில்லா பள்ளிகள் 59,829 மேலும், சுமார் 14,505 பள்ளி களில் இன்னும் குடிப்பதற்கு தகுதி யான தரத்துடன் கூடிய குடிநீர் வசதிகள் செய்துதரப்படவில்லை.

மிக மோசமான சூழல் என்ன வென்றால் கிட்டத்தட்ட 59,829 பள்ளிகளில் கைகளைக் கழுவுவ தற்கான வசதிகள் கூட இல்லை.

இது மாணவர்களின் ஆரோக்கி யத்தையும் சுகாதாரத்தையும் நேர டியாகப் பாதிக்கிறது.

தொலைதூர மற்றும் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதி களில் உள்ள பல பள்ளிகளில், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பல வகுப்பு களைக் கவனிப்பதோடு, நிர்வாகப் பொறுப்புகளையும் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒரு லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் கல்விக்கான ‘ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு பிளஸ்’ தரவுகளின்படி, இந்தியா வில் 1 லட்சத்திற்கும் அதிகமான பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்டு மட்டுமே இயங்கி வருகின்றன.

இது நாட்டின் ஒட்டு மொத்த பள்ளிகளில் 7% க்கும் அதிகமாகும். இதனால் வெவ்வேறு வகுப்புகளைச் சேர்ந்த மாணவர் கள் ஒரே அறையில் அமர வைக்கப் பட்டு ஒன்றாகப் பாடம் கற்கும் நிலை ஏற்படுகிறது.

இது மாணவர்க ளுக்கான தனிப்பட்ட கவனத்தைக் குறைப்பதுடன், கல்வியின் தரத்தையும் பாதிக்கிறது. மாணவர்களே இல்லா 8 ஆயிரம் பள்ளிகள் நாடு முழுவதும் சுமார் 7,993 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படவில்லை எனப் பதி வாகியுள்ளது.

இதில் அதிகபட்ச மாக மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் முன்னி லையில் உள்ளன.

ஒரு மாணவர் கூட இல்லாத போதிலும், பழைய ஆவணங்களின் அடிப்படையில் இந்தப் பள்ளிகளுக்குத் தொடர்ந்து நிதி ஒதுக்கப்படுகிறது.

ஆசிரியர் நியமனங்களும் நடைபெற்று வருகின்றது. கள எதார்த்தத்திற்கும், கல்வித் திட்டமிடலுக்கும் இடையே உள்ள இடைவெளியை இப்பிரச்சனை கள் காட்டுகின்றன.

பாதியில் வெளியேறுதல் 11.5 சதவீதம் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது பள்ளிகளில் இருந்து பாதியிலேயே நின்று விடும் மாணவர்களின் எண் ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறப் படுகிறது.

எனினும் மேல்நிலைக் கல்வி அளவில் 11.5 சதவிகித மாண வர்கள் கல்வியைப் பாதியிலேயே கைவிடும் சூழல் நிலவி வருகிறது. அதே நேரத்தில் கடந்த 2005-இல் அரசுப் பள்ளிகளில் 71 சதவிகிதமாக இருந்த மாணவர் சேர்க்கை 2024–25-இல் 49.24 சத விகிதமாகக் குறைந்துள்ளது. பொ துக் கல்வி முறையை அரசு முறை யாக பராமரிக்காததன் வெளிப் பாட்டின் காரணமாக பெற்றோர்களி டையே வளர்ந்து வரும் அதிருப்தி யை இது பிரதிபலிக்கிறது என கூறப்படுகிறது.

92 ஆயிரம் பள்ளிகள் குறைவு கடந்த 2017–18 ஆம் ஆண்டில் 15.58 லட்சமாக இருந்த பள்ளி களின் எண்ணிக்கை, 2024–25 ஆம் ஆண்டில் 14.71 லட்சமாகக் குறைந்துள்ளது. அதாவது 92,000 பள்ளிகள் குறைந்துள்ளன. ‘சமக்ர சிக்ஷா’ (Samagra Shiksha) போன்ற ஒன்றிய அரசின் திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப் பட்ட பள்ளிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் சீரமைப்பு (Consolidation and rationalisation) நடவ டிக்கைகளே இந்த எண்ணிக்கைக் குறைவிற்குக் காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.