தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

8.7 கோடி இளைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு இல்லைநிதி ஆயோக் அதிர்ச்சி தகவல்

yesterday
8.7 கோடி இளைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு இல்லைநிதி ஆயோக் அதிர்ச்சி தகவல்

8.7 கோடி இளைஞர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு இல்லைநிதி ஆயோக் அதிர்ச்சி தகவல்

நாட்டில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட சுமார் 8.7 கோடி இளைஞர்கள் கல்வி, வேலை அல்லது திறன் பயிற்சி என எதிலும் ஈடுபடாமல் இருப்பதாக நிதி ஆயோக் அதிர்ச்சிதகவலை வெளியிட்டுள்ளது.

‘விக்சித் பாரத்@2047க்கான திறன் மேம்பாட்டை மறுவடிவமைத்தல்’ (Reimagining Skilling for Viksit Bharat@2047) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,”இந்தியாவில் பள்ளிக் கல்வி கற்பவர்கள், உயர்கல்வி செல்பவர்கள், முறைசார் மற்றும்முறைசாரா தொழில்களில் ஈடுபடுபவர்கள், பெண்கள் மற்றும் கல்வி, வேலைவாய்ப்பு அல்லது பயிற்சியில் இல்லாதவர்கள் (என்இஇடி இளைஞர்கள் : NEET - Not in Education, Employment, or Training) என 5 பிரிவுகளாகவகைப்படுத்துகிறது. இந்த என்இஇடி இளைஞர்கள் வருமானம் இல்லாததாலும், முந்தைய கல்வியில் செய்த முத

லீட்டுச் செலவுகளாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மாணவர்கள் பெரும்பாலும் தங்களதுதற்போதைய நிதிச் சுமையுடன் கூடுதல் கட்டணம் செலுத்திப் பயிற்சி பெற முடிவதில்லை. இந்தப் பிரிவினருக்கு,பெண்களுடன் சேர்த்து, மலிவான அல்லது மானிய விலையிலான பயிற்சியும், நிதி உதவியும் தேவை. அதே சமயம் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் வளர்ந்து வரும் துறைகளின் தேவைகள் மற்றும் சுயவேலை வாய்ப்புகளுடன் இணைக்கப்பட வேண்டும்.

அனைத்துப் பிரிவுகளிலும், கற்றலையும் ஈட்டுதலையும் இணைக்கும்திறனே ஒரு முக்கியத் தேவையாக உள்ளது. கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களில் வெறும் 8.25% பேர் மட்டுமே தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்பபொருத்தமான வேலைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். முறையான கல்வி கற்ற இளைஞர்களிடையே கூட, நடைமுறைக் கற்றல் மற்றும் தொழில்துறை சார்ந்த பயிற்சிபற்றிய குறைந்த அளவிலான வெளிப்பாடே வேலைவாய்ப்பைக் கட்டுப்படுத்துகிறது.

குறைந்த ஊதியம்

குறைந்த வருமானம் கொண்டகுடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களால் கல்லூரிச் செலவுகளுடன் சேர்த்து கூடுதல் திறன் பயிற்சிக்காகப் பணம் செலுத்த முடிவதில்லை. இதன் காரணமாகவே பலர் பட்டம் பெற்றபிறகு குறைந்த ஊதியமாக இருந்தாலும் நிலையான வருமானம் தரும் ஏதேனும் ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வாறு செய்ய முடியா

தவர்கள் வேலைவாய்ப்பைப் பெற முடியாமல் போராடி ‘என்இஇடி’ பிரிவில்தள்ளப்படுகிறார்கள்.

இதை நிவர்த்தி செய்ய, முறையான கல்விக்குப் பிறகு ஒரு விருப்பத்தேர்வாகப் பார்ப்பதை விட, பள்ளிகளிலேயே திறன் மேம்பாட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைஉலகளாவிய பொது வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் திறன்கள் கற்பிக்கப்பட வேண்டும்.

9ஆம் வகுப்பிலிருந்து முறைப்படுத்தப்பட்ட தொழிற்கல்விப் பாதைகள் வழங்கப்பட வேண்டும்” என நிதி ஆயோக் அமைப்புவலியுறுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.