மதுரை மாவட்ட ஆட்சியராக நிஷாந்த் கிருஷ்ணா பொறுப்பேற்பு
yesterday
<p><strong>மதுரை மாவட்ட ஆட்சியராக நிஷாந்த் கிருஷ்ணா பொறுப்பேற்பு </strong></p><p>மதுரை, ஜூன் 21- மதுரை மாவட்ட ஆட்சிய ராக நிஷாந்த் கிருஷ்ணா ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய மாவட்ட ஆட்சியராக அவர் பொறுப்பேற் றார். நிஷாந்த் கிருஷ்ணா, ஈரோடு மாவட்டத்தில் உதவி ஆட்சியர் பயிற்சியாளராக பணியாற்றியதுடன், திருச்சி ராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் சார் ஆட்சியராகவும் பணி யாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சென்னை டைடல் பார்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகவும், தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (சிப்காட்) நிறுவ னத்தின் செயல் இயக்குநராகவும், சென்னை வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார். மேலும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராகவும், சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றிய அவர், தற்போது மதுரை மாவட்டத்தின் 220-ஆவது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.</p>
