“நிசார்” செயற்கைக் கோள் வேலை செய்யத் தொடங்கியது
29 Nov 2025, 4:58 pm
<p><strong>“நிசார்” செயற்கைக் கோள் வேலை செய்யத் தொடங்கியது</strong></p>
<p>புவியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிக்கவும் பருவநிலை மாற்றங்களை ஆய்வு செய்யவும் இஸ்ரோ - நாசா கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்ட “நிசார்” செயற்கைக் கோள் வேலை செய்யத் தொடங்கியது. புவியின் மேற்பரப்புப் புகைப்படங்களை எடுத்து அனுப்பத் தொடங்கியிருக்கிறது. நிசாரில் அமைந்துள்ள எஸ்பாண்ட் ராடார், கோதாவரி ஆற்றுப் படுகை பகுதிகளின் விவரங்களை புகைப்படமாக எடுத்து அனுப்பியுள்ளது. இதில், மங்குரோவ் காடுகள், வயல்வெளி, பயிரிடப்படும் இடங்கள், நீர்நிலைகள் என அனைத்தும் துல்லியமாக படமெடுக்கப்பட்டுள்ளது.</p>
