திருச்சுழி அரசுக் கல்லூரியில் உள்விளையாட்டு அரங்கம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்
18 Jul 2026, 9:16 pm

திருச்சுழி அரசுக் கல்லூரியில் உள்விளையாட்டு அரங்கம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்

திருச்சுழி, ஜூலை 18- விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசு கலை மற் றும் அறிவியல் கல்லூரியில் ஒன்றிய அரசு மற்றும் எஸ்பிஐ வங்கி நிதியின் கீழ் ரூ.4.50 கோடியில் அமைக் கப்பட்ட நவீன உள் விளை யாட்டு அரங்கத்தை நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். இந்த விழாவில் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங் கம் தென்னரசு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகை யில், ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய இளைஞர்கள் பதக்க மேடையில் முதல் மூன்று இடங் களைப் பிடித்துப் பதக்கம் வெல்ல வேண்டும் என்று ‘கேலொ இந்தியா’ திட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும், ஒவ்வொரு நாடாளு மன்ற உறுப்பினரும் தங்க ளது தொகுதிகளில் உள்ள கிராமப்புற மாணவர்களுக் காக ‘சான்சத் கேள் கும்ப்’ என்ற விளையாட்டுத் திரு விழாவை நடத்த வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தி னார். விளையாட்டு என்பது கட்சி, அரசியல் ஆகியவற் றிற்கு அப்பாற்பட்டது. இளைஞர்களின் எதிர்காலத் திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். “திருச்சுழி என்ற உடனே அனைவருக்கும் ரமணர் பிறந்த புண்ணிய பூமி நினை வுக்கு வரும். அதேபோல், இனிவரும் காலத்தில் விளை யாட்டுத் துறை என்று எடுத் தால் ஒட்டு மொத்தத் தமிழ் நாட்டிற்கும் ‘திருச்சுழி’ தான் நினைவுக்கு வர வேண்டும். அன்று கேரளாவின் பி.டி. உஷா என்ற ஓட்டப் பந்தய வீராங்கனை இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். அதே போல, திருச்சுழி மண்ணிலி ருந்தும் சர்வதேச சாம்பியன் களும், ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வீரர்களும் உரு வாக வேண்டும். இதுவரை ‘விருதுநகர் என்றால் வியா பாரம்’ என்றுதான் உலகிற் குத் தெரியும்; ஆனால் இனி, ‘விருதுநகர் பிள்ளைகள் விளையாட்டிலும் சாம்பி யன்கள்’ என்ற புதிய பெரு மையைப் பெற்றுத் தர வேண் டும்” எனத் தெரிவித்தார்.