நிபா வைரஸ் பரவல்: கண்காணிப்பு தீவிரம்
12 Jun 2026, 9:21 pm

நிபா வைரஸ் பரவல்: கண்காணிப்பு தீவிரம்

சென்னை: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை, கேரள எல்லை களில் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் விரிவான வழிகாட்டுதல் கள் வழங்கப்பட்டுள்ளன.

வௌவால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிட மிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய இந்த வைரஸால் காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூச்சுத் திணறல் மற்றும் கடுமை யான நிலையில் மூளை வீக்கம் ஏற்படலாம் என்று மருத்து வர்கள் எச்சரிக்கின்றனர்.

தரையில் விழுந்த பழங்களை உண்ணாமல் இருப்பது, காய்ச்சாத பனைஞ்சாறு அருந்துவதை தவிர்ப்பது, வௌ வால்கள் வசிக்கும் கிணறுகளில் இறங்காமல் இருப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிபா வைரஸுக்கு தனிப்பட்ட தடுப்பூசியோ மருந்தோ தற்போது இல்லை என்பதால், கேரளத்திலிருந்து வரு வோர் மற்றும் கடுமையான காய்ச்சல் அறிகுறி உள்ளோரை உடனடியாக பரிசோதிக்க அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.