500 மீட்டர் ஆழத்திற்குச் செல்லும் புதிய சுற்றுலா நீர்மூழ்கி வாகனம்; என்ஐஓடி திட்டம்
3 Jun 2026, 11:34 pm
<p><strong>500 மீட்டர் ஆழத்திற்குச் செல்லும் புதிய சுற்றுலா நீர்மூழ்கி வாகனம்; என்ஐஓடி திட்டம்</strong></p><p>சென்னை, ஜூன் 3- இன்னும் இருபது ஆண்டுகளில், பொதுமக்கள் ஆழ்கடலில் 500 மீட்டர் ஆழம் வரை நீர்மூழ்கி வாகனம் மூலம் சென்று, கடலுக்குள் மூழ்கியுள்ள பண்டைய நகரங்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை 360 டிகிரி கோணத்தில் பார்க்கும் புதிய வசதியைச் சென்னை தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கி வருகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற நீருக் கடியிலான ரோபோட்டிக்ஸ் பயில ரங்கில் கலந்துகொண்ட என்ஐஓடி இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன், நிறுவனத்தின் ‘விஷன் 2047’ இலக்கின் கீழ் இத்திட்டம் வடிவமைப்பு நிலையி லுள்ளதாகத் தெரிவித்தார். மகாபலி புரம், பூம்புகார் மற்றும் துவாரகை போன்ற பகுதிகளில் கடலுக்குள் மூழ்கிக்கிடக்கும் வரலாற்றுச் சின்னங் கள் மற்றும் பவளப்பாறைகளை மக்கள் நேரடியாகக் காண்பதே இதன் நோக்க மாகும். இந்த ஆழ்கடல் சுற்றுலா வாக னம் 20 முதல் 40 பேர் வரை அமர்ந்து செல்லும் வகையில் பெரிய அளவில் வடிவமைக்கப்பட உள்ளது. இந்தியாவின் ‘சமுத்ராயன்’ திட்டத் தின் கீழ் 3 பேர் 6,000 மீட்டர் ஆழம் வரை செல்லும் வகையில் உருவாக் கப்பட்டு வரும் ‘மத்ஸ்யா 6000’ விண்க லத்தின் பெரிய வடிவமாக இது திட்டமிடப்பட்டுள்ளது. ‘மத்ஸ்யா 6000’ இந்த ஆண்டின் பிற்பகுதியில் 500 மீட்டர் ஆழ சோதனையையும், 2027-இல் 6,000 மீட்டர் ஆழ சோதனையையும் எதிர்கொள்ளவுள்ளது. ஆனால், சுற்றுலா வாகனமானது 40 பேருக்கான ஆக்சிஜன் வசதி, எடை மற்றும் மிதப்புத் திறன் ஆகியவற்றைக் கட்டுப் படுத்த வேண்டியிருப்பதால், முற்றி லும் மாறுபட்ட வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட மின்னணுத் தொழில்நுட்ப அமைப்புகளுடன் உருவாக்கப்பட வேண்டியிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவற்றை பொருத்தி ஜூலை மாதம் மீண்டும் சென்னை துறை முகத்தில் சோதனை செய்ய உள்ளோம். மட்ஸ்யா வாகனத்தில் கடலுக்கு அடியில் செல்பவர்களுக்கு வெளிநாடு களில் உள்ள பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி அளித்துள்ளோம். மேலும் கடற்கரையில் பணிபுரிந்த பயிற்சி பெற்ற ஒருவரும் குழுவில் உள்ளார். இந்த நீர்மூழ்கி வாகனம், கடலுக்குள் 12 மணி நேரம் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 6,000 மீட்டர் ஆழத்திற்கு செல்வ தற்கு நான்கு மணி நேரமும், கடலுக்கு அடியில் ஆய்வுகளை மேற்கொள்ள 4 மணி நேரமும், பின்னர் கடலில் மேல் பகுதிக்கு வருவதற்கு 4 மணி நேரமும் எடுத்துக் கொள்ளும் வகையில் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.</p>
