தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கனமழை பாதிப்பு: மலை ரயில் சேவை நவ.7 வரை ரத்து

5 Nov 2026, 12:31 am
கனமழை பாதிப்பு: மலை ரயில் சேவை நவ.7 வரை ரத்து

கனமழை பாதிப்பு: மலை ரயில் சேவை நவ.7 வரை ரத்து

உதகை, நவ.4-கனமழை பாதிப்பு எதிரொலியாக, நீலகிரி மலை ரயில் மேலும்மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் மஞ்சூர் போன்ற பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. கடந்த மூன்று நாட்களுக்குமேலாக மழை சற்றுகுறைந்திருந்த நிலையில், ‘முரசு’ புயல் காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதற்கு ஏற்றார் போல், பெய்த கனமழையால் உதகை நகரின் மையப்பகுதியில் செல்லும் கோடப்பமந்து கால்வாயில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், மத்திய பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பாலத்தின் அடியில் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்கி நின்றது. தாழ்வான பகுதிகளில் மழை நீர்தேங்கியதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். கடந்த ஒரு வாரமாக நீர் பனி மற்றும் பனி மூட்டம் காரணமாக உதகையில் குளிர் நிலவி வந்தது. இந்நிலையில், பகல் நேரத்திலேய மழை கொட்டியதால் குளிரும் அதிகரித்தது. மழையின் காரணமாக உதகைஏரியில் சிறிது நேரம் மிதி படகுசவாரி நிறுத்தப்பட்டது. அதேபோல்,தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, ரோஜா பூங்கா போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகளும் மழையால் பாதிக்கப்பட்டனர்.

மலை ரயில் சேவை ரத்துநீலகிரி மாவட்டத்தில் பெய்ததொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், ரயில் தண்டவாளங்களில் பாறைகள் மற்றும் மண் சரிந்துவிழுந்ததுடன், பல இடங்களில் மரங்களும் தண்டவாளங்களை மறித்து மலை ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதகமான வானிலை மற்றும் கடினமான மலைப்பகுதி நில அமைப்புக்கு மத்தியிலும், ரயில்வே ஊழியர்கள்தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், சேதங்களின் அளவு அதிகமாக இருப்பதால் சீரமைப்புப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. இதையடுத்து பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மேட்டுப்பாளையம் – உதகை இடையே நவ.7 ஆம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.