தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொய்த்துப்போன பருவமழை! வற்றிப்போன அணைகள்! நீர் மின்சாரம் உற்பத்தி பாதிப்பால் பொதுமக்கள் பாதிப்பு - ஷேக் அமீன் -

22 Jul 2026, 10:54 pm
பொய்த்துப்போன பருவமழை! வற்றிப்போன அணைகள்! நீர் மின்சாரம் உற்பத்தி பாதிப்பால் பொதுமக்கள் பாதிப்பு - ஷேக் அமீன் -

பொய்த்துப்போன பருவமழை! வற்றிப்போன அணைகள்! நீர் மின்சாரம் உற்பத்தி பாதிப்பால் பொதுமக்கள் பாதிப்பு - ஷேக் அமீன் -

உதகை, ஜூலை 22- நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை போதியளவு பெய்யாததால், அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்து காணப்படுகிறது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள தால், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வரு கின்றனர்.

மின் உற்பத்தி பாதிப்பு நீலகிரி மாவட்டத்தில் குந்தா, அவலாஞ்சி, அப்பர் பவானி மற் றும் அதை சுற்றியுள்ள அணைக ளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இருந்து சுமார் 80.33 மெகாவாட்ஸ் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் நீலகிரி மாவட்டத்திற்கு 70 மெகா அவார்ட்ஸ் மின்சாரம் தேவைப்படுகிறது. மீதி, ஈரோடு மாவட்டத்திலுள்ள மின் உற்பத்தி நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் மின்சா ரம் விநியோகம் செய்யப்பட்டு வரு கின்றன.

இந்நிலையில், தென் மேற்கு பருவமழை போதியளவு பெய்யாத காரணத்தினாலும், அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததாலும் மின் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே மின்சாரம் பற்றாக் குறை ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வரு கின்றனர். வறண்ட ஆறுகள் நீலகிரியில் தேயிலை விவசா யத்திற்கு அடுத்தபடியாக, மலை காய்கறி விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 10 ஆயி ரம் விவசாயிகள் ஈடுபட்டுள்ள னர்.

விவசாயிகள் தவிர, இதில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்கள் உட்பட மறைமுகமாகவும், நேர டியாகவும் சுமார் 1 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். நீல கிரியில் ஆண்டிற்கு 3 முறை மலை காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கோடை மழை பெய்யும் என்று நம்பி, ஆயிரக்கணக்கான ஏக்கரில் மலை காய்கறிகளை விவ சாயிகள் பயிரிட்டுள்ளனர். ஆனால், விவசாயிகள் நினைத்தது போல மழை பெய்யவில்லை.

பொய்த்துப்போன பருவமழை கோடை மழை போதிய அளவு பெய்யாத நிலையில், விவசாயி கள் தென்மேற்கு பருவமழையை நம்பியிருந்தனர். காலதாமதமாக தொடங்கிய மழை, கடந்த சில தினங்களாக தீவிரமடைந்தது. இதனால் விவசாயிகள் விவசாயி பணிகளை மேற்கொள்ள ஆயத்த மாயினர். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு பருவ மழை பெய்யா மல், கடந்த சில நாட்களாக மீண் டும் வெயிலின் தாக்கம் அதிகரித் தது.

இதனால் இந்த ஆண்டு சாகு படி செய்துள்ள 15 ஆயிரம் ஏக்கரில் கிணற்று பாசனம் தவிர மீதியுள்ள 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் முற்றி லும் பாதிக்கப்படக்கூடிய அபாய நிலையில் உள்ளன. குறிப்பாக, அதிக மலை காய்கறிகளை சாகு படி செய்யும் முத்தொரை, கல்லக் கொரை, பாலாடா, கப்பத்தொரை, நஞ்சநாடு, பைகமந்து சுற்று வட் டாரப் பகுதிகளில் ஓடும் பாலாடா ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயி ரிடப்பட்டுள்ள மலை காய்கறி பயிர் கள் தண்ணீர் இன்றி வாடி வரு கின்றன.

இதனால் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் கவ லையடைந்துள்ள நிலையில், சிலர் பயிரிட்டுள்ள மலை காய்கறி பயிர்களை காப்பாற்ற, வறண்டு கிடக்கும் ஆற்றில் பள்ளம் தோண்டி, அதில் தேங்கும் நீரை மோட்டார் மூலம் பாய்ச்சி வருகின்றனர். மேலும், சிலர் ரூ.1000 வரை பணம் கொடுத்து, தண்ணீரை வாங்கி லாரிகளில் கொண்டு சென்று மலை காய்கறிகளுக்கு பாய்ச்சி வருகின்றனர்.

மேலும், மலை காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், உற் பத்தி குறைந்து அவற்றின் விலை யும் அதிகரித்து வருகிறது. இனி வரும் நாட்களில் அவற்றின் விலை பன்மடங்கு உயர வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை பொய்த் துப்போனதால், நீலகிரி மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக் கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.