தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மைக்ரோ பைனான்ஸ் கெடுபிடிக்கு பலியான கூலித் தொழிலாளி!

1 Nov 2026, 1:28 am
மைக்ரோ பைனான்ஸ் கெடுபிடிக்கு பலியான கூலித் தொழிலாளி!

மைக்ரோ பைனான்ஸ் கெடுபிடிக்கு பலியான கூலித் தொழிலாளி!

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், சேரம்பாடி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நுண்கடன்

(மைக்ரோ பைனான்ஸ்) நிறுவனங்களின் அத்துமீறல்களாலும், கடன் வசூல் கெடுபிடிகளாலும் ஏழை, எளிய குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய அநியாயக் கடன் வசூல் நடைமுறைகள் குறித்து மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட கூடலூர், தேயிலை தோட்டத் தொழிலாளர்களும், தினக்கூலித் தொழிலாளர்களும்நிறைந்த பகுதியாகும். இங்குள்ள மக்கள் குடும்பச் செலவு, மருத்துவம் மற்றும் குழந்தைகளின் கல்விக்காக வேறுவழியின்றி மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களை நாடி கடன் பெறுகின்றனர்.

ஆனால், தேயிலை தொழில் முடக்கம் மற்றும் போதிய வருமானமின்மை காரணமாக, பெற்ற கடனுக்கான வார அல்லது மாதத் தவணைகளை சில சமயங்களில் உரிய நேரத்தில் செலுத்த முடியாமல் தொழிலாளர்கள் தவிக்கின்றனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சிலநுண்கடன் நிறுவனங்கள், கடன் வசூல் என்ற பெயரில் தொழிலாளர்களை மிரட்டுவது, பொதுவெளியில் அவமதிப்பது போன்ற கொடூர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து தொடர்ந்துபுகார்களும் வெளியாகிறது.

கூலித் தொழிலாளி தற்கொலைஇந்த கெடுபிடியின் உச்சக்

கட்டமாக, ஒரு கொடூரச் சம்பவம் சேரம்பாடியில் அரங்கேறியுள்ளது. சேரம்பாடி கண்ணம்வயல் பகுதியைசேர்ந்தகூலித் தொழிலாளி பிரகாஷ் என்பவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் தனது குடும்ப தேவைக்காகமைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி பிரகாஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டார். அவர் உயிரிழப்பதற்கு முந்தைய நாள், கடன் வசூலிக்க வந்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் அவரைகடுமையாக பேசி அவமதித்ததே இந்த முடிவுற்கு காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பிரகாஷின் உறவினர்கள் கூறுகையில், ”காவல்துறையினர் உடனடியாக இந்த சம்பவம் குறித்து நேர்மையான விசாரணை நடத்த வேண்டும். பிரகாஷின் உயிரிழப்பிற்கும், மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்களின் அத்துமீறிய கடன் வசூல் நடவடிக்கைகளுக்கும் உள்ள தொடர்பை கண்டறிந்து தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.இச்சம்பவம் குறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ”வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்த ஏழைகள் தயங்கவில்லை; தவணை கட்ட சற்று கால அவகாசம் மட்டுமே கேட்கிறார்கள். அவமதிப்பால் பறிபோன பிரகாஷின் உயிரை இந்த கடன் நிறுவனங்களால் திருப்பித் தர முடியுமா? கடன் வசூல் நடைமுறைகளில் குறைந்தபட்ச மனிதநேயமாவது கடைப்பிடிக்கப்பட வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் எளிய முறையில் ஏழை மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசு முன்வர வேண்டும். விதிமீறலில் ஈடுபடும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்வதோடு சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அரசின் சட்டங்களும், ரிசர்வ் வங்கி விதிகளும்மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் ஏழை நுகர்வோரை அச்சுறுத்தக் கூடாது என்பதற்காக பல்வேறு கடுமையான சட்ட விதிகளும், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்களும் நடைமுறையில் உள்ளன.

கடன் மீட்டெடுப்பு ஊழியர்கள் கடனாளிகளையோ அல்லது அவர்களது குடும்பத்தினரையோ அச்சுறுத்தவோ, தகாத வார்த்தைகளால் திட்டவோ, உடல்ரீதியான மிரட்டல்கள் விடுக்கவோ கூடாது. கடன் வசூலிப்பதற்காக கடனாளியின் வீட்டிற்கு காலை 8.00 மணிக்கு முன்னரோ அல்லது மாலை 7.00 மணிக்கு பின்னரோ செல்லக் கூடாது. கடனாளியின் வீட்டிற்கு முன்பாக நின்று கூச்சலிடுவது, அக்கம் பக்கத்தினரிடம் கடனைப் பற்றி பேசி அவர்களை அவமானப்படுத்துவது, அவர்கள் பணிபுரியும் இடத்திற்கு சென்று தொந்தரவு செய்வது சட்டப்படி குற்றமாகும். கடன் வசூல் ஊழியர்களின் மிரட்டல் அல்லது அவமதிப்பு காரணமாக ஒருவர் தற்கொலை செய்துகொண்டால், சம்மந்தப்பட்ட நிறுவன ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தின் மீது ”தற்கொலைக்குத் தூண்டுதல்” என்ற ஜாமீனில் வர முடியாத கடுமையான பிரிவின்கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் இடமுள்ளது. அதேபோன்று, தமிழக அரசின் அநியாய வட்டி

தடை சட்டத்தில், அரசு நிர்ணயித்த அளவை விட அதிக வட்டி வசூலிப்பது, கந்துவட்டி, மீட்டர் வட்டி மற்றும் மிரட்டல் மூலமாக பணத்தை பறிப்பது ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

கூடலூர் பகுதியில் ஒரு அப்பாவித் தொழிலாளியின் உயிர் பலியாகியுள்ள நிலையில், இனிவரும் நாட்களில் இதுபோன்ற துயரங்கள் நிகழாமல் இருக்க, நீலகிரி மாவட்டநிர்வாகமும் மாவட்ட காவல்துறையும் உடனடியாக தலையிட்டு, சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.(ந.நி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.