தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீலகிரியில் மண்சரிவு: சீரமைப்புப்பணிகள் தீவிரம்

27 Oct 2026, 10:47 pm
நீலகிரியில் மண்சரிவு: சீரமைப்புப்பணிகள் தீவிரம்

நீலகிரியில் மண்சரிவு: சீரமைப்புப்பணிகள் தீவிரம்

உதகை, அக்.27-நீலகிரியில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், சீரமைப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

நீலகிரி மாவட்டம், குன்னூர் மலைப்பாதையில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, மேட்டுப்பாளையம் வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் வழி போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இவ்வழியில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் 62 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். இதில் அனைத்து இடங்களிலும் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் ஒரு இடத்தில் மட்டும் பொறியாளர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், கனமழை பெய்ததால் ரயில் தண்டவாளங்களில் கற்கள் மற்றும் மண்சரிவு ஏற்பட்டு, மலை ரயில் சேவை அக்.29 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாத் தலங்கள் திறப்புஇந்நிலையில், கடந்த அக்.24 முதல் 26 ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த சுற்றுலாத் தலங்கள் செவ்வாயன்று முதல் செயல்படத் துவங்கின. பேருந்துகள் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலை வழியாக வழக்கம் போல் அனுமதிக்கப்படுகிறது. குன்னூர் – பர்லியார் – மேட்டுபாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சீர் செய்யும் பணி நடைபெற்று கொண்டிருப்பதால் அடுத்த அறிவிப்பு வரும் வரை வாகனப் போக்குவரத்து அவ்வழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்தார். அதன்படி, இதேபோல தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா காட்சி முனை என மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கபட்டுள்ளன. உதகை படகு இல்லம் திறக்கபட்ட உடன் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் படகு இல்லத்திற்கு வந்து மோட்டார் படகு, துடுப்பு படகு, மிதி படகுகளில் சவாரி செய்து திரும்பி செல்கின்றனர். இதனால் உதகை நகரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.