தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீலகிரி: 125 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் முன்னதாகவே தகவல் அளிக்க சென்சார் பொறுத்த திட்டம்!

30 Oct 2026, 11:57 pm
நீலகிரி: 125 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் முன்னதாகவே தகவல் அளிக்க சென்சார் பொறுத்த திட்டம்!

நீலகிரி: 125 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் முன்னதாகவே தகவல் அளிக்க சென்சார் பொறுத்த திட்டம்!

உதகை, அக்.30-நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழையின் போது, நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னதாகவே எச்சரிக்கும் சென்சார் கருவிகளை 125இடங்களில் பொறுத்துவது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வுப்பணியைமேற்கொண்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர்வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையும் பெய்யும். இந்த இரு பருவமழைகளால் மாவட்டம் முழுவதும் பசுமையாகவும், நீர் மின் உற்பத்தி தங்கு தடையின்றி நடைபெறும். தென்மேற்கு பருவமழையின் போது இடர்பாடுகள் குறைவாகவே இருக்கும். ஆனால், வடகிழக்கு பருவமழையின் போது தான் நீலகிரியில் நிலச்சரிவு, சாலை துண்டிப்பு, மரம் விழுதல் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்புகளால் கடந்த சிலஆண்டுகளாகவே நீலகிரியில் பருவமழைகள் முறையாக பெய்யவில்லை. இம்முறை எல்-நினோ தாக்கம் காரணமாக ஜூன் மாதத்தில் துவங்க வேண்டிய தென்மேற்குபருவமழை எதிர்பார்த்தப்படி துவங்கவில்லை. கடந்த அக்.15 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கியது. கடந்த அக்.23 முதல் 25 ஆம் தேதி வரை நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது.

அதற்கேற்ப, பெய்த கனமழை காரணமாக உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் 88 இடங்களில் மண்சரிவு, 61 இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு, 19 இடங்களில் தடுப்புசுவர் இடிதல், 23 வீடுகள் சேதம், 11 மின் கம்பங்கள் சேதம்,ஒருவர் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக, அக்.23ஆம் நள்ளிரவு கொட்டிய கனமழையால் குன்னூர் - மேட்டுபாளையம்சாலையில் பர்லியார் அருகே கோவை நோக்கி சென்ற அரசுபேருந்து மீது மண் மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததில் ஓட்டுநர்உயிரிழந்தார். இந்நிலையில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் சார்பில் நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் பருவமழை சமயங்களில் நிலச்சரிவு ஏற்படுவதை முன்கூட்டியே கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, பேரிடர் மீட்பு வல்லுநர் குணால் வருவாய்த்துறையினருடன் இணைந்து நிலச்சரிவு ஏற்பட்ட பர்லியார் பகுதியில் ஆய்வு செய்தார். தொடர்ந்து வியாழனன்று உதகை அருகில் லவ்டேல், தலையாட்டி மந்து, கோடப்பமந்து,அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வுமேற்கொண்டார். மாவட்டம் முழுவதும் 125 இடங்கள்நிலச்சரிவு அபாயம் உள்ள இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்த பிறகு அந்த இடங்களில் கனமழை காலங்களில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னதாகவே தகவல் அளிக்க கூடிய சென்சார் கருவிகள் பொறுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.