தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மனித – விலங்கு மோதல்: ஆட்சியர் ஆலோசனை

31 May 2026, 10:53 pm
மனித – விலங்கு மோதல்: ஆட்சியர் ஆலோசனை

மனித – விலங்கு மோதல்: ஆட்சியர் ஆலோசனை

உதகை, மே 31- கூடலூர் பகுதியில் தொடரும் மனித - விலங்கு மோதல் தொடர் பான ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பாக்கனா பகுதியில் மிஷாப் என்ற சிறுவன் யானை தாக்கி உயிரிழந்தார். இதுதொடர் பாக அனைத்துத்துறை அலுவலர் கள் மற்றும் பொதுமக்களுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம் சனியன்று கூடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு பேசுகையில், பாக்கனா பகுதியில் யானை தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், ஊர் பொதுமக்களின் கோரிக்கை யான பேருந்து, சாலை, தெரு விளக்கு, சோலார் மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் தொடர்பாக ஊராட்சித் துறை, வனத் துறை அலு வலர்கள் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். வனத்துறை சார்பில் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்ப டுத்தி, கண்காணிப்பு கேமராக் களை அதிகப்படுத்த வேண்டும். உயிரிழந்த சிறுவனின் குடும்பத் திற்கு வீடு ஒதுக்கீடு செய்யவும், அவரது சகோதரருக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக சக்கர நாற்காலி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக சம் பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நட வடிக்கை எடுக்க வேண்டும், என் றார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிருந்தா, கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் மு. திராவிடமணி, வன அலுவலர் தேவ ராஜ், கோட்டாட்சியர் குணசேகரன், துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தகுமார், வட்டாட்சியர்கள் முனீஷ், துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி வனச்சரகத்திற்குட்பட்ட மெட்டுக்கல் இருளர் பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் குமார் (45). விவசாயியான இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் அருகேயுள்ள கொப்பையூர் கிராமத்திற்கு வெள்ளியன்று சென்றுவிட்டு, இரவு மீண்டும் மெட்டுக்கல் கிராமத் துக்கு திரும்பியுள்ளார். அங்கு தேயிலைத் தோட்டத்தில் உலாவிய யானை தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இத னிடையே, குமார் வீடு திரும்பாததால் கிராம மக்கள் சனியன்று பல இடங்களில் தேடினர். அப்போது காபி ஸ்டோர் என்ற இடத்தில் குமாரின் சடலம் கண்டறியப்பட்டது. இதுகுறித்து கீழ்கோத்தகிரி வனத் துறையினர், சோலூர்மட்டம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை யினர் குமாரின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.