தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு மருத்துவமனை பணியாளர்களின் ஊதியம் குறைப்பு ஜூலை 15 முதல் காத்திருப்புப் போராட்டம்: சிஐடியு அறிவிப்பு

13 Jul 2026, 12:24 am
அரசு மருத்துவமனை பணியாளர்களின் ஊதியம் குறைப்பு ஜூலை 15 முதல் காத்திருப்புப் போராட்டம்: சிஐடியு அறிவிப்பு
<p><strong>அரசு மருத்துவமனை பணியாளர்களின் ஊதியம் குறைப்பு ஜூலை 15 முதல் காத்திருப்புப் போராட்டம்: சிஐடியு அறிவிப்பு</strong></p><p>உதகை, ஜூலை 12- நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதி யம் குறைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, ஜூலை 15 ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம் நடைபெறவுள்ளதென சிஐடியு அறி வித்துள்ளது. இதுகுறித்து சிஐடியு நீலகிரி மாவட்டச் செயலாளர் சி.வினோத் வெளியிட்டுள்ள அறிக்கையில், குன்னூர், கூடலூர், பந்தலூர், கோத்தகிரி, எமரால்டு மற்றும் மஞ் சூர் அரசு மருத்துவமனைகளில் கிரிஸ்டல் ஒப்பந்த நிறுவனம் மூலம் ஏராளமான தூய்மைப் பணியாளர் கள் மற்றும் பிற ஒப்பந்த தொழிலா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளம் அண்மையில் எந்தவித நியாயமான காரணமும், முன்னறி விப்பும் இன்றி குறைக்கப்பட்டுள் ளது. இந்த நடவடிக்கை தொழிலா ளர் நலச் சட்டங்களுக்கும், இயற்கை நீதிக் கோட்பாடுகளுக் கும் எதிரானதாகும். மேலும், தொழி லாளர் சட்டங்களின்படி மற்றும் மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ள (Collector Wages) ஊதிய விகிதத் தின்படி தொழிலாளர்களுக்கு ஊதி யம் வழங்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை அந்த ஊதியம் வழங்கப்படாததால் தொழிலாளர் கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரு கின்றனர். இப்பிரச்சனைகள் குறித்து பலமுறை ஒப்பந்ததாரர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளி டம் எடுத்துரைத்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் தொழிலாளர் கள் மிகுந்த மனவேதனையுடனும் பொருளாதார சிரமத்துடனும் உள்ளனர். எனவே, குறைக்கப்பட்ட சம்ப ளத்தை முழுமையாக வழங்க வேண்டும். சட்டத்தின் அடிப்படை யில், ஆட்சியர் நிர்ணயித்துள்ள (Collector Wages) ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து சட்டப்பூர்வ ஊதியப் பலன்கள் மற்றும் தொழி லாளர் உரிமைகளை முழுமையாக உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 15 ஆம் தேதியன்று முதல் குன்னூர் மற்றும் கூடலூர் அரசு மருத்துவமனைகளில் காத்திருப்புப் போராட்டம் நடை பெறவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.