தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீலகிரியில் கேன்களில் டீசல் விநியோகம் கிடையாது! வேளாண் பணிகள் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை

19 Jun 2026, 12:26 am
நீலகிரியில் கேன்களில் டீசல் விநியோகம் கிடையாது! வேளாண் பணிகள் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை

நீலகிரியில் கேன்களில் டீசல் விநியோகம் கிடையாது! வேளாண் பணிகள் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை

உதகை, ஜூன் 18- நீலகிரியில் பிளாஸ்டிக் கேன்களில் டீசல் விநியோ கம் இல்லாததால், வேளாண் பணிகள் மேற்கொள்ள முடி யாமல் விவசாயிகள் பாதிக் கப்பட்டுள்ளனர்.

ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதி கரித்து, இந்தியாவில் பெட் ரோல், டீசல் விலைகள் உயர்ந்தன.

நாட்டில் தற் போதைக்கு பெட்ரோல், டீசல் தட்டுப் பாடு இல்லை என்றாலும், ஒன்றிய அரசு முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கை களை எடுத்து வருகிறது. அந்த வகையில் பெட்ரோல் விற்பனையில் சில கட்டுப்பாடு கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒன்றிய பெட் ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவில், தொழிற்சாலைகள், நிறுவனங் கள் உள்ளிட்டவற்றுக்கு மொத்தமாக டீசல், பெட்ரோலை பெட்ரோல் விற்பனை நிலை யங்கள் விற்கக்கூடாது.

அந்த தொழிற்சாலை கள், நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான டீசல், பெட்ரோலை மொத்தமாக அவர்களின் ஆலைகளுக்குள் இருக்கும் பெட்ரோல் விற் பனை மையத்தில் இருந்தே பெற வேண்டும். இந்த மொத்த பெட்ரோலும், டீசலும் ஆலை கள், நிறுவனங்களுக்கு செல்வதை தடுப்ப தன் மூலம், அவற்றை சாதாரண வாகன ஓட்டி கள் வாங்க முடியும்.

இதன்மூலம் உள்ளூா் சந்தையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற் படாது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகனங்களில் நாளொன்றுக்கு 200 லிட்டர் மட்டுமே டீசல் நிரப்ப வேண்டும். அந்த டீசல், வாகன டேங்கா் அல்லது பெட்ரோலியம் மற் றும் வெடிபொருள்கள் தடுப்பு அமைப்பின் (பெசோ) அங்கீகாரம் பெற்ற கண்டெயனர்க ளில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.

அந்த டீசலை வாகன ஓட்டிகள் மறுவிற்பனை செய்யக் கூடாது. இந்தக் கட்டுப்பாடு 90 நாள் களுக்கு அமலில் இருக்கும். அதன்பிறகு ஒன் றிய அரசு விரும்பினால், புதிய அறிவிப்பு மூலம் மேலும் நீட்டிக்கப்படும் என்று அறி விக்கப்பட்டது.

இந்நிலையில், அத்தியாவ சிய பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற் றும் டீசல் ஆகியவற்றை கேன்கள் மற்றும் பேரல்களில் கொடுக்கக் கூடாது என உத் தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு காரண மாக நீலகிரி மாவட்ட விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியாமல் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட விவசாயிகள் கூறு கையில், நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவ சாயத்தில் சரியான வருமானம் இல்லாத தால், பலரும் காய்கறி உள்ளிட்ட மாற்று விவ சாயங்களில் கவனம் செலுத்தி வருகின்ற னர். ஏற்கனவே தென்மேற்கு பருவமழை சரி வர பெய்யாமல் தற்போது ஏமாற்றி வரு கிறது.

இந்நிலையில் சமவெளி பகுதிகளை போல அல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் டீசல் மூலமே விவசாய மோட்டார்கள் இயக் கப்பட்டு தண்ணீர் பாசனம் செய்து விவ சாயப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் விவசாயிகள் யாருக்கும் தற்போது கேன்களில் டீசல் விநி யோகம் செய்யப்படாததால் சாகுபடி பணி கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில் விவசாயத்தை காப் பாற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக் கலைத் துறை இந்த விஷயத்தில் இணைந்து செயல்பட்டு விவசாயிகளுக்கு கேன்களில் டீசல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும்.

இல்லாவிட்டால் விவசாயிகளுக்கு தனித்தனியாக அடையாள அட்டை கொடுத்து அவர்களுக்கு மட்டும் கேல்களில் டீசல் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.